பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 62 f

1920-இல் அமெரிக்க நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் வரலாற்றுப் பாடத்தில் ஒரு தேர்வு நடந்தது. அந்தத் தேர்வின் விடையேடுகளே ஆறு பேராசிரியர்கள் திருத்த வேண்டும். 100-க்கு 60 மதிப்பெண்களுக்குக் குறைவாக வாங்குவோர் தேர்வில் தவறியவர்கள். தவறும் எல்லே யிலுள்ளவர்களின் விடையேடுகளை எல்லோரும் பார்க்க வேண்டும். மனச்சான்றுக்குச் சிறிதும் மாருது பணியாற்றும் ஒருவர் தனக்கு வழிகாட்டியாக இருக்கும்பொருட்டு மாதிரி விடைகளே எழுதிக்கொண்டு திருத்தினர். தவறுதலாக இந்த விடையேடு தவறும் நிலையிலுள்ளவர்களின் விடையேடுகளுடன் கலந்துவிட்டது. அதையும் ஒருவரின் விடையேடு என்று ஏனேயோர் நினைத்து அதற்கும் மதிப் பெண்கள் வழங்கினர். அது 40-லிருந்து 80 வரையிலும் மதிப்பெண்கள் பெற்றது. தன்னுடைய தேர்விலேயே தவறும் பேராசிரியர் நிலையைக் காணும்பொழுதும் இது போன்ற பிற சான்றுகளாலும் இக்கட்டுரைச் சோதனையில் ஒரு பெருங்குறை இருப்பதாக உறுதி செய்யவேண்டி யுள்ளது. இவை இரண்டும் பெருங்குறைகள். வேறு குறைகளும் உள்ளன. பேராசிரியர் பாலார்ட் திருத்து வோரைப்பற்றிக் கூறும் கருத்து இவ்விடத்தில் சிந்திக்கத் தக்கது. மருத்துவர்களின் தவறுகள் கல்லறைக்குக் கீழ் மறைந்து கிடப்பதைப்போலவே, தேர்வாளர்களின் தவறுகள் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைக்கப் பட்டுள்ளன.”*

பிற குறைகள் : கட்டுரை என்பது பல கூறுகளைக் கொண்ட திறனுல் உண்டாக்கப்பட்ட ஒர் படைப்பு. ஒவ்வொருவரும் தத்தமக்கேற்றவாறு அளவுகோல்களே மாற்றிக்கொண்டு அதைத் திருத்துவர். கையெழுத்து, மொழிநடை, பொருளைக் கோவையாகத் தொகுத்துக்கூறும் போக்கு, அரிய சொல்லாட்சி, மரபுத்தொடர் ஆபிசி,

  • “The examiners’ blunders are as carefully hidden from the public gaze as are the doctors’ blunders under the tombstones. Ballard”, P. B : The Examiner p. 65.