பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ் பயிற்றும் முறை

துறைகள் விருப்பப்பாடங்களாக அமையின் நன்று. உயர்நிலைக் கல்வித்திட்ட அறிக்கையில் இதற்கேற்ற வாறு வாய்ப்புக்கள் தரப்பெற்றுள்ளன. அறிக்கையில் ஏழு துறைகள் விருப்பப் பாடங்களாக அமைந்திருத்தலேக் காணலாம். உயர்நிலைப் பள்ளிகளில் படிப்பவர்களில் 25-30% மாணுக்கர்களுக்குமேல் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் செல்லுவதில்லை. பெரும்பான்மையோர் இத்துடன் கல்வியை முடித்துக்கொள்வார்களாதலால், கல்வித் திட்டம் அவர்களுக்குப் பல துறைகளின் எண்ண ஏற்றத்தைத் தந்து அவர்களே அவற்றில் செலுத் தக்கூடியதாக அமையவேண்டும். எடுத்துக்காட்டாக, பொறிநுட்பக் கலையில் நாட்டமுள்ள ஒரு மாணுக்கன் அத் துறைக்குரிய விருப்பப்பாடங்களைத் தேர்தெடுத்துப் படித்து அத்துறையைப் பற்றிச் சிறிது விளக்கம் அடை வான் ; பின்னர் அத்துறையில் தனிப் பயிற்சியும் பெறுவான். இக்கல்வித் திட்டம் அவன் விரும்பும் துறையில் சிறிது: பயிற்சியினைத் தந்து, போதுமான பொதுக்கல்வியையும் அளித்து வாழ்க்கைக் கலையில் சிறந்த குடிமகளுகத் தன் கடமைகளை நிறைவேற்றும்படி செய்யத் துணையாக இருக்கும்.

உயர்நிலைப்பள்ளிக் கல்வித்திட்டத்தை அமைப்பதில் இன்ளுெரு இன்றியமையாத செய்தியினேயும் கவனிக்க வேண்டும். நடுநிலைப்பள்ளிகளிலிருந்தும், உயர்நிலைத்தொடக்கப்பள்ளிகளிலிருந்தும் மாணுக்கர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் வந்து சேர்கின்றனர். இவர்கள் சிறிதுவேறுபாடுள்ள வெவ்வேறு பாடத்திட்டத்தைப் படித்தவர்கள். இவர்கள் படித்த பள்ளிகளிலும் வெவ்வேறு கற்பிக்கும் முற்ைகள் நடைமுறையிலிருக்கின்றன. இவர்கள் சிறிது காலமாவது ஒரே பாடத் திட்டத்தைப் பயின்று ஒரேவித அனுபவத்தையும் மனப்பான்மையையும் பெறவேண்டியது அவசியமாகும். உயர்நிலைக் கல்விக் குழுவினர் ஓராண்டு

5 Report of the Secondary Education Commission. பக், 92-94.