பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3° தமிழ் பயிற்றும் முறை

நெறியிற் சென்று செல்வத்தைப் பெற்ற தன் தாயைக்கடிந்துகொள்வதையும் ஒப்பிட்டுக் காட்டலாம். வாழ்க்கை யில் காணப்பெருத-ஏன் ? காணவே முடியாத்-நிகழ்ச்சி களையும், அன்ருட வாழ்வில் பட்டறியும் ஏமாற்றங்களேயும் நிறைவு செய்து கவிஞன் இலக்கிய உலகைப் படைத்து, தான் மகிழ்வதுடன் அவ்விலக்கியத்தைப் படித்து அந்த இன்ப உலகில் உலவும் நம்மையும் மகிழ்விப்பதையும் மானுக்கர்கட்கு எடுத்துக் காட்டலாம். .இதனுல் மாணுக்கர்கள் வாழ்கையின் உண்மைகளைப் பல கோணங்களில் காணுவதில் பயிற்சி பெறுவதுடன், இலக்கிய இன்பத் திலும் திளைப்பர்.

4. கற்றலில் அக்கறையை உண்டாக்கல் : குழந்தை.களின் இயல்பூக்கங்களுக்கு முறையீடு செய்யும் முறையில் மொழிப் பாடத் திட்டத்தை அமைத்தால், கற்றலில் அக்கறை (Interest) உண்டாக்குதல் எளிதாக நிறைவேறும். செயல் மூலம் கற்பித்தால் அக்கறை தானுகப் பிறக்கும் ; இயல்பூக்கங்களுக்கு ஏற்றவாறு வேலைகளே அமைத்துக் கொண்டால் குழந்தைகளிடம் இயல்பாகவே அக்கறை தோன்றும். அக்கறை தோன்றினுல்தான் கற்றலில் கவனம் ஏற்படும் ; குழந்தைகளும் கருத்துடன் கற்பர். அக்கறையைக் கற்றலின் ஈர்ப்பு விசை என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாற்றலையுடைய அக்கறையைக் கற்றலில் எங்ங்ணம் உண்டாக்குவது ? குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு மனவளர்ச்சி இருக்குமென்றும், அதற்கேற்றவாறு குழந்தைகளின் விருப்பமும் மாறக்கூடியதென்றும் உளவியல் அறிஞர்கள் கூறுவர். எனவே,குழந்தை களின் பருவநிலைகளுக் கேற்றவாறு மொழிப் பாடத்திட்டம் அமையவேண்டும். இத் துறையில் இன்னும் சரியான முறையில் கவனம் செலுத்தப்பெறவில்லை. குழந்தைகளின் வயதிற்கேற்ற மனப்பான்மையை அடிப்படையாகக்கொண்டு மொழிப் பாடத் திட்டத்தை அமைக்க வேண்டுமானல் உளவியல் அறிஞரும் பட்டறிவு மிக்க பள்ளி யாசிரியரும் ஒத்துழைக்கவேண்டும். இன்று