பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழ் பயிற்றும் முறை

வல்ல ஒரு சில மொழி ஆசிரியர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அதற்கு மாருன நிலையினை ஏற்படுத்தும் பல ஆசிரியர்களும் உள்ளனர். குழந்தைகளின் கற்றலில் வெறுப்புணர்ச்சியைத் தானுக வளர வழி வகுப்பவர்கள் இவர்கள். இதை உணர்ந்த ஜார்ஜ் பெர்னட்ஷா என்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர், கல்வி ஹோமியோ பதி முறையை ஒட்டியுள்ளது என்று கிண்டலாகக்கூறிச் சென்ருர். அவர் கருத்துப்படி, இளைஞர்களிடம் ஒரு பாடத்தில் வெறுப்பை உண்டாக்கவேண்டுமானல், அதைப் பள்ளிப் பாடமாக நுழைத்துவிட்டால் போது மானது ; பள்ளி வாழ்வில் மாணுக்கர்களிடம் வெறுப்புணர்ச்சி வளர்வதுடன், பிற்கால வாழ்விலும் அது நிலத்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தது. இதனுலன் ருே அம்மேதை தனது நூல்களைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்களாக வைக்கக்கூடாதென்று கூறிச் சென்ருர்?

5. ஐந்து ஒழுங்கான படிகள் : நாம் எந்தப் பாடத்தைக் கற்பித்தாலும் அதில் ஐந்து படிகள் இருப்பதை உணர்கின்ருேம். நாம் மேற்கொண்ட முறையில் ஐந்து படிகள் இருப்பது ஆராய்ந்து பார்த்தால் நன்கு புலனுகும். எல்லாக் காலத்து ஆசிரியர்களும் இப் படிகளே அறிந்தோ அறியாமலோ கையாண்டபோதிலும் இவற்றை முதன் முதலாகக் கண்டறிந்து கல்வி உலகத்திற்கு அளித்தவர் ஹெர்பார்ட்(Herbart) என்ற அறிஞர். இந்த ஐந்து படிகளுக் கும் பின் ல்ை வந்த ஹெர்பார்ட்டின் மாணுக்கர்கள் நன்கு விளக்கந் தந்துள்ளனர். கற்பிக்கும் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த ஐந்து படிகளைப் பற்றியும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். மனத்தைத் தயாரித்தல், எடுத்துக்கூறல், ஒப்பிடல், பொது விதி காணல், விதியைச் செயற்படுத்தல் ஆகியவை ஹெர்பார்ட் கண்ட ஐந்து படிகளாகும். இவற்றை 'ஹெர்பார்ட்டின் முறையான ஐந்து படிகள்’ என்றே வழங்குவர். இவை ஒவ்வொன்றையும் பற்றி ஒரு சிறிது ஈண்டு ஆராய்வோம்.