பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 65

மனத்தைத் தயாரித்தல் (Preparation) : கற்பித்தலில் இப் படி எல்லாப் பாடங்களுக்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தும். புதிதாகப் பயிலப்போகும் கருத்துக்களே ஏற்பதற்கு மாணுக்கர்களின் மனத்தைத் தயார் செய்வதே இப் படியின் நோக்கம். ஏற்கெனவே அறிந்துள்ளவற்றுடன் புதிய செய்திகளே இணைத்தால்தான் அவை நன்கு பொருந்தி அனுபவமாகும். எனவே, கற்பிக்கும் ஆசிரியர் மாளுக்கரின் முன்னறிவினைச் சில விளுக்களால் சோதித்து அறிய வேண்டும். இதையறியாது கற்பிக்கும் ஆசிரியரின் முயற்சி வீணுகப்போகும். கற்பிக்கும் பாடத்தை யொட்டி ஒரு சில தேர்ந்தெடுத்த வினுக்களே விடுத்தால், மாணுக்கர் ஏற்ற விடைகள் பகர்வர் ; அவ்விடைகளிலிருந்து அவர்களுடைய முன்னறிவுத்திரளேத் (Apperceptive mass) தெரிந்துகொள்ள லாம். அனுபவக் குறையுள்ளவர்கள் இந்நிலையை மிகக் கருத் துடன் சமாளிக்க வேண்டும். தேவையற்ற விளுக்களை விடுத்து மாணுக்கரின் கவனத்தைப் பாடத்தில் ஈர்ப்பதற்குப் பதிலாக அவர்கள் மனத்தைப் பல்வேறு விதமாக அலையும்படி செய்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஒரு சில விளுக்களே விடுத்தோ,ஒரு சிறு தொடக்கத்தைக் கூறியோ மாணுக்கரின் மனத்தைத் தயார் செய்து விடலாம். மலைவுதரும் பொருளே ஒரு சில சொற்களால் கூறிவிளக்குதல், கவனத்தை ஈர்க்கும் தலைப்பைக் கரும்பலகையில் எழுதுதல், கடந்த பாடத்தைப் பற்றி ஒரு குறிப்புக் காட்டல், புதிய பாடத்தைப்பற்றி ஒரு சிறிது கூறுதல், கடந்த வாரத்தில் நடைப்பெற்றதைச் சிந்திக்கும்படி நேரிய முறையில் தூண்டுதல்-போன்றவை புதிய பாடத்தைத் தொடங்குவதற்கேற்ற முகவுரைகளாகக் கொள்ளலாம். பாடத்தின் நோக்கத்தை உணர்த்துவதனுலேயே மாணுக்கர்களின் மனத்தைக் கவர்வது இப் படியின் பொது விதியாகும். சுருக்கமாகவும் அழுத்தமாகவும் இதைச் செய்ய முடிந்தால், அதனுல் பெரும்பயன் உண்டு.

ஒரே பொருளேப்பற்றித் தெரிந்துகொள்ளும் பகுதியில் பல பாடங்களுக்கு முன்னுரையாக மாணுக்கர்களின் மனத்தைத் தயாரித்தால் கற்றல் நன்கு அமையும். முழுதி

த-6