பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

፬ 0፬

'விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை

உக்கம் சேர்த்தியது ஒருகை

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை அங்குசம் கடாவ ஒருகை இருகை - ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய ஒருகை . கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை வாணர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி"

என்று பாடியுள்ளதையும் ஈண்டு உணர்வோமாக. ஆகவே வயிரவ மூர்த்தியும் உருவத் திருமேனி கொண்டு படைகளைத் தாங்கி நகர்க்காவல் புரிந்து உலக மக்களைக் காத்து வருகின்ருர்.

இந்த உருவத் திருமேனியுடைய பெருமானைப், பூசனை செய்வது என்ருல், நாம் எந்நிலையில் ஒழுகுபவராக வேண்டும் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்ருர். ஆண்டவனைப் பொய்வகைகளை விட்டுப் பூசனை செய்யவேண்டும் என்பது திருமூலர் உள்ளக் கிடக்கை. அதனுல்தான் துய்யக் உளத்தில் துளங்குமெய்யுற்றதாய், பொய்வகை விட்டு நீ பூசனை செய்யே என்கிருர், துயருளத்தில் வயிரவர் விளங்குவர் என்ற குறிப்பும் புலப்படுதலின், பூசனை புரிபவர்க்கு உள்ளத் தூய்மையும் வேண்டும் என்பது புலனுகின்றதன்ருே? உள்ளம் தூய்மையுடையதாவதற்கு எளிய வழியின,

'புறக்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்'

என்று வள்ளுவர் கூறும் வாய்மொழியால் அறியலாம். எனவே நாம் வாய்மையைக் கொண்டே ஒருவனது உள்ளத் தூய்மை யைத் தெரிந்துகொள்ளலாம். தூய்மை ஏற்படும்போது