பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

fiá

திருவிழா நடத்தும் முறை முதலானவை குறிக்கப்பட்டிருக்கும். சைவ சமய விளக்கங்களைத் தெரிவிப்பது சைவ ஆகமம் ஆகும். அது சிவாகமம் என்றும் கூறப்பெறும். பல என்ற குறிப்பைக் காட்ட எண்ணிலி கோடி எனப்பட்டது. நீரில் எழுத்தை எழுதினல் பயன் தராது; அதுபோல ஆகமப் பொருள் அறியா விடில் பயன் தராது என்பதாம்.

இறைவன் ஆகமத்தைத் தமிழிலும் வடமொழியிலும் அருளிச் செய்தனன்

19. மாரியும் கோடையும் வார்பனி தூங்ககின்

நேரியும் நின்றங் கிளைக்கின்றகாலத்து ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக் காரிகை பார்க்கும் கருணைசெய் தானே.

(இ - ள்) மழைக்காலம், வெயிற்காலம், பனிக்காலம் ஆகிய இவை எல்லாம் ஒய்ந்து உறங்க, உலகம் யாவும் ஒரே நீர்மயமாக இருக்கும் நீர்ப் பிரளயகாலத்தில், இறைவன் தனது இருட் சக்தியாகிய உமாதேவியார்க்கு வடமொழி யிலும் தென்மொழியிலும் ஆ க ம த் ைத அருள் செய்தருளினன்.

(அ- சொ) மாரி - மழைக்காலம். கோடை-வெயிற்காலம். துரங்க-அடங்க. ஏரி - பிரளய வெள்ளம். ஆரியம் - வட மொழி: ஈண்டு, வடமொழி ஆகமங்கள். காரிகையார் . பேரழகுடைய தேவியார். --

(விளக்கம்) ஊழிக்காலத்தில் கார்காலம், வெயிற்காலம், பனிக்காலம் என்பது இன்றி, எல்லாம் அடங்கி இருக்கும் ஆதலின், தூங்க எனப்பட்டது. இறைவிக்கு அருள்செயின், அவள் வழியே உயிர்கள் பெற்றுக்கொள்வர். ஆதலின், முதற் கண் ஆகமங்களைத் தேவிக்கு அருள் செய்தனன்,