பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

篱盛翼

(அ-சொ) நந்தி - இரண்டாம் சம்பு என்னும் நந்தி கேஸ்வரர். நாதர் - ஞானசிரியர்கள், நாடினன் . தேடினன். நந்திகள். நந்திகேஸ்வரர் பரம்பரையினர்கள். நால்வர் - சனகர், சனந்தர், களுதர், சனற் குமாரர். மா - பெரிய, சிறந்த மன்று - சிதம்பரப் பொற்சபை. -

(விளக்கம்) இறைவனிடம் முதல்மாணவராக இருந்து அருள் பெற்றவர் நந்தியம்பெருமான். அவர் வழியே ஏனையவர் உபதேசம் பெற்றனர். ஆக நந்தி அருள் பெற்ற நாதர் எனப்பட்டனர். புவிக்காலுடைய முனி வியாக்ரபாதர் பாம்புக்காலுடையவர் பதஞ்சலி. இவர்கள் என்றும் ஆனந்தக் கூத்தைக்கண்டு தொழுபவர் ஆதலின் மன்று தொழுத என்ற அடையுடன் குறிக்கப்பட்டனர். என்னுடன் எ ன் ற து ஈண்டுத் திருமூலரையே ஆகும்.

திருமூலர் ஆகமப்பொருளை அறிவித்தமை 22. கந்தி இணேயடி யான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அக்தி மதிபுனை அரனடி நாள்தொறும் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. (இ - ள்) நந்தியம்பெருமானம் ஆசாரியனுடைய இரண்டு திருவடிகளைச் சிரமேல் தாங்கி , உள்ளத்தில் அந்நந்தியம் பெருமான் திருவுருவம் புகச்செய்து போற்றி, மாலைக்காலத்தில், தோன்றும் பிறைச்சந்திரனைச் சடையில் தரித்த சிவ பெருமான் திருவடிகளைத் தினமும் மனத்தில் தியானம் செய்து, ஆகமத்தைச் சொல்லத் தொடங்கினேன். (அ-சொ) இணை - இரண்டாகிய, புந்தி - மனம். புகப் பெய்து இருக்கவைத்து. அந்தி - மாலைவேளை. மதி - பிறைச் சந்திரன். புனை - தரித்த, அரன் - சிவபெருமான். செப்பல் . சொல்லல்.

(விளக்கம்) குருவினைப் போற்ருது சமய காரியங்களில் புகுந்தால், ஒன்றும் கைகூடி வராது. ஆதலில்ை, நந்தியம்