பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

$źź

பெருமான் திருவடிகளைத் தலைமேலும் உள்ளத்திலும் கொண்

டதாகக் கூறப்பட்டது.

குருவைப் போற்றுவதுபோல், அவளுல் அறிவிக்கப்பட்ட இறைவனையும் இடைவிடாது சிந்தனை செய்ய வேண்டி இருத் தலின், அரனடி நாள் தொறுந் சிந்தனை செய்து’ என்றனர்.

தக்களுல் தேயும் சாபம் பெற்ற சந்திரன், தேய்ந்து தேய்ந்து பிறையானபோது, அவன் இறைவனை அடைக்கலம் புக, அவனை ஏற்றுத் தன் சடையில் புனைந்து, சந்திரசேகரன் என்ற பெயரையும் பெற்று இறைவன் விளங்குகின்ருன்.

திருமூலர் திருவாவடுதுறையில் இருத்தல்

23. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந்தேன்சிவன் ஆவடு தண்துறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே .

(இ - ள்) அருளாகிய சிற்சத்தியின் மளுளளுகிய சிவ பெருமானைச் சேர்ந்திருந்தேன். திருவாவடுதுறை என்னும் தலத்தில் சேர்ந்திருந்தேன். மங்களகரமான அரசமரத் தின் நிழலில் சேர்ந்தேன். அங்கு இருந்தபோது, சிவபெரு மானுடைய திருப்பெயர்களைச் செப்பிக்கொண்டே இருந் தேன்.

(அ-சொ) சிவமங்கை - உமாதேவி. பங்கன் - பார்வதி யைப் பக்கத்தேயுடைய, சிவபெருமான். திருவாவடுதுறை-சிவ த ல ங் க ளு ள் ஒன்று. போதி - அரசமரம். நாமங்கள் . பெயர்கள்.

(விளக்கம்) போதியின் கீழ் இருப்பினும், சிவன் திருப்பெய ரைச் செப்பியவண்ணம் இருந்தார் என்பது, இதனால் பெறப் படுகிறது.