பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

麗蓉證

அவன் தனது வாழ்நாள் கெட்டபோது, சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் பாடையாகிய பல்லக்கில் ஏறி, நாட்டார்கள் எல்லாம் பின் தொடர, முன்னே சாப்பறை முழங்க, நாட்டுக்குரிய தலைவன் செல்லும் விதத்தைப் பார்த்தீர்களா!

(அ- சொ) சிவிகை - பல்லக்கு. நம்பி . ஆடவரில் சிறந்த வன்.

(விளக்கம்) இறப்பு என்பது எவரையும் விடாது என்பதை விளக்கவே நாட்டுக்கு நாயகனும் ஊர்த்தலைவனும் ஆன ஒருவனது இறப்பைக் குறித்துப் பேசப்பட்டது. சுடுகாட்டுக்குப் பிணத்தை எடுத்துச் செல்லப் பாடை என்று ஒன்று இருத்தலின், அதனைக் காட்டுச்சிவிகை என்றனர். அரசாங்கத் தில் உள்ளபோது ஊர்ந்து சென்றது பல்லக்கு (சிவிகை); இறந்தபோது ஊர்ந்து செல்வது பாடை. ஆதலின் காட்டுச் சிவிகை எனப்பட்டது.

உறவினர் அன்பு இல்லார் எனல் 44 ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்

ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின் வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. (இ - ள்) இறந்தபோது, நெருங்கிய உறவினர்களும் மனைவியும் பிள்ளைகளும், ஊர்ப் பொதுவாகிய வாய்க் காலில் சென்று செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்து முடிப்பர். அப்படி முடித்தபின், அழுகின்ற போது உண்டாகும் வியர்வையை நீக்கிக் கொண்டு, விறகு இட்டுத் தீ மூட்டிவிட்டு, நீரில் மூழ்கி வீடு திரும்புவார்கள். இவர்கள் அன்பு இல்லவர்கள் அல்லரோ? *

(அ- சொ) ஆர்த்து அழும் - ஆரவாரித்து அழுகின்ற. சுற்றம் - உறவினர். துறைக்கால் - பெ ாதுவாய்க்கால். ஒழிவு f