பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

fag

ஈமக் கடனைச்செய்து முடிப்பர். வேர்த்தல் - வியர்த்தல். நீர்த்தலை . நீரில்.

(விளக்கம்) பிணமானவர் உயிரோடு இருந்தபோது அவர் களுக்கு எந்தவிதமான தீங்கும் நேரிடா வண்ணம் கண்ணும் கருத்துமாகக் கவனித்த உறவினர், மனைவி, மக்கள் ஆகியோர், தம் உறவினர் பிணமானபோது சுட்டு எரித்தமையின் அச் சுற்றத்தாரை நீதியில்லார், அன்பு இல்லார் எனக் கூறினர்.

இறந்த உடலை எவரும் வைத்திரார் 45. வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றும்

குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர் உடலுடைக் தால் இறைப் போதும் வையாரே. (இ - ள்) வளமுடைய வீட்டு முற்றமும் பெரிய நிலமும் குளமண்ணும் கொண்டு குயவன் மண்பாண்டங்களைச் செய்வான். அவன் செய்த குடங்கள் உடைந்தாலும் உடைந்தவற்றை ஒடுகள் என்ற பெயரால் எடுத்து வைத்துக் கொள்வர்; எறிந்துவிட மாட்டார். ஆனல் உடம்பு உயிர் அற்றுப் பிணமாக விழுந்தால், அவ்வுடம் பிடத்தில் எவ்வளவு பற்று உடையவரானலும், சிறிது நேரமும் அப்பிணத்தை வீட்டில் வைத்திருக்க மாட் டார்கள். -

(அ - சொ) மா - பெரிய. வனைந்தான் - செய்தவன். (குயவன்) இறை - சிறிது. போது - நேரம். -

(விளக்கம்) உடம்பும் குடம் போன்றது. இதனையும் ஒரு குயவன் செய்கின்றன். அவ்வாறு செய்பவன் பரசிவன் ஆன பெற்ற பிரமன். ஆகவே, அவனும் ஒரு குயவன் ஆவான். ஆனல் அவன் வேதம் ஒதிய குயவன். சக்கரம் கொண்டு கலயங்கள் செய்யப் பரந்த இடம் வேண்டும் ஆதலின், முற்றத் தையும் மாநிலத்தையும் குறிப்பிட்டார். குழைந்த மண் தேவை யாதலின் குளமண் குறிக்கப்பு ட்டது.