பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

i4&

உயிர் அற்ற பிணம் எங்கில உற்ருலும் கவலை இல்லை 46. காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என்

பால்துளி பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துட்டும் கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. (இ - ள்) தோலால் அமைந்த பையாம் இவ்வுடம் பினுள் உயிராகிய கூத்தன் இருந்துகொண்டு, செய்ய வேண்டிய தொழில்களை முற்றிலும் செய்து, வினைகளை அனுபவிக்குமாறு செய்கிருன். இப்படிச் செய்யும் உயிர் உடலை விட்டுப் போன பிறகு, பிணமானபோது அதனைக் காக்கை கவர்ந்தால்தான் என்ன? பார்த்தவர்கள் பழித்துப் பேசினல் தான் என்ன? பாலைத் துளியாகக் கொட்டில்ை தான் என்ன? பலரும் அப்பிணத்தைப் புகழ்ந்து பேசிளுல் தான் என்ன? -

(அ - சொ) அற - முற்றிலும். ஊட்டும் அனுபவிக்கச் செய்யும். கூத்தன் - ஆட்டி வைக்கும் உயிர். கூடு - உடம்பு. பழிச்சில் புகழ்ந்தால்.

(விளக்கம்) உடம்பின் ஆட்டத்திற்குக் காரணம் உயிர் ஆதலின், அவ்வுயிர் கூத்தன் எனப்பட்டது. இறந்த உடலைக் காக்கை கொத்தியுண்ணும். இறந்தவர் ஒரு சிலருக்குத் தீமை புரிந்திருப்பின் அப்பிணத்தைப் பழிப்பர். நன்மை பெற்றவர் புகழ்வர். இவ்விரண்டையும் உட்கொண்டே பழிக்கில் என்? பழிச்சில் என்? என்றனர். -

தேடிய செல்வம் கிற்காது 47. ஈட்டிய தேன்யூ மணம்கண் டிரதமும்

கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்

ஒட்டித துரந்திட்டது.வலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.