பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

意酵 வறுமையிலும் இறைவனைப் போற்றுதல் வேண்டும்

61. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று

அக்குழி துர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. (இ - ள்) பொய்க்குழியாகிய வயிற்றுக் குழியை அடைக்கப் பொழுது விடிகிறதென்று, அரிய பொருளேத் தேடி உழலும் அக்குழியைத் துார்க்கப் பாடுபடுவதில் பலன் இல்லை. மக்களே! பிறவிக் குழியை அடைக்கும் இறை வனைப் போற்றுங்கள். மலமாகிய அழுக்கு அற்றவுடன் பிறவிக்குழி அடைபடும். -

(அ-சொ) பொய்க்குழி-வயிறு. புலரி - பொழுது. புலருது விடிகிறது. எக்குழி - எந்தவிதமான குழியும். தூர்ப்பான். அடைக்க ஏத்துமின் - போற்றுங்கள். அழுக்கு - மாயை.

(விளக்கம்) உண்மைக்குழி பொருள்களைக் கொண்டு அடைபடும். வயிற்றுக்குழி இடையருது வேளாவேளைக்குப் பொருள்களைக்ப் பெற்ருலும் அடைபடாது. ஆதலின் அதனை பொய்க்குழி என்றனர். வறுமைக்குழி நோய்குழி, பிறவிக்குழி என எந்தக் குழியும் என்பார் எக்குழி என்றனர்.

வயிற்றைத் துர்க்க அரிது

62. கற்குழி தூரக் கனகமும் தேடுவர்

அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. (இ - ள்) கல்லில் தோன்றிய குழி போன்ற வயிருகிய குழியை உணவு முதலிய பொருள்களால் அடைக்கப் பொன்னத் தேடுவர். அந்த வயிற்றுக் குழியை அடைப் புது மிகவும் கடினம். ஆகவே, அந்த வயிற்றுக் குழியை