பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15

சென்னைக் கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்லூரிச்சித்த வைத்தியப் பகுதிப் பேராசிரியரும், சித்த மருத்துவாங்கச் சுருக்க நூல்

ஆசிரியரும் ஆகிய,

டாக்டர் க. சு. உத்தமராயன்

செந்தமிழ்ச் செல்வர், தமிழ்ப் பேராசிரியர், சைவ சமய சிரோமணி உயர்திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களை நான் கடந்த முப்பது ஆண்டுகளாக நன்கு அறிவேன். அவர் சிறந்த தமிழ் நூலாராய்ச்சியுடையார் என்பதை அவருக் குள்ள பட்டங்களாலும், இப்போது சென்னை இராயப் பேட்டை புதுக்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி யாற்றி வருவதாலும் அறியலாம்.

சைவத்தில் மிக்க ஆர்வமும், அதை மென்மேலும் வளர்க் கவும் பரவவும் செய்யவேண்டும் என்னும் அவாவுமுடைய வரென்பது அவர் பல சைவசமய நூற்களை வெளியிட்டும், சைவசமயச் சொற்பொழிவுகளே ஆற்றியும் வருவதால் புவன கின்றது. . . . .

இப்போது அவர்கள், தமிழில் மந்திரம் இல்லை, வட மொழியில்தான் உண்டு என்பது தவருனது, தமிழிலும் உண்டு என்று காட்டுதற்குத் தமிழ் மந்திரம்' என்ற பெயரால் இந்த நூலே உலகுக்களித்து, அதன் மூலம் யாவரும் அறிய விளங்கவைக்கின் முர் இ ந் நூ லி ல் திருமூலர் திருமந்திரத்தினின்று 365 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக் கின்ருர்,

இந்நூலின் தொடக்கத்தில் இவ் உரையாசிரியர் எழுதி யுள்ள 15 ஆராய்ச்சிக் கட்டுரைகளுள் ஒன்றில் நம், சைவசமய குரவர்கள் பாடியருளிய பாக்களை விரிவுபட ஆராய்ந்து, தமிழ் மொழியிலும் அர்ச்சனே வழிபாடு செய்யலாம் என்பதைத் தெள்ளத் தெளிய எழுதி இருப்பது ஊன்றிக் கவனித்தற் குரியது. .

திருமூலர் திருமந்திரத்தில் இந்நூலாசிரியர் தேர்ந் தெடுத்த 365 மந்திரங்களில் 32 செய்யுட்கள் மருத்துவம் பற்றியனவாகும். (123 முதல் 13 வரையிலும் 34 முதல் 365 வரையிலுமுள்ள மந்திரங்களேப் பார்க்க) மற்ற மந்திரங்கட்கு