பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

178

நடுவு கின்ருர் சிவம் ஆவார் 99. நடுவுகின் ருன்கல்ல கார்முகில் வண்ணன்

நடுவுகின் ருன்வல்ல நான்மறை ஓதி நடுவுநின் ருர்சிலர் ஞானிகள் ஆவோர் கடுவுகின் ருர்கல்ல கம்பனும் ஆமே. - (இ - ள்) கரியமேகம் போன்ற நிறமுடைய திருமால், தான் காக்கும் தொழிலில் வேறுபாடு காட்டாமல், நடு நிலையோடு நின்று தன் தொழிலை நடத்தி வருகிமூன். அவனைப் போலவே நான்கு வேதங்களை கூறிப் படைப்பதில் வன்மை மிக்க பிரம்ம தேவனும் தன் படைப்புத் தொழிலை நடுநிலைமையோடு செய்து வருகின்ருன். ஞானிகளாக இருப்பவர்களுள் சிலரும் நடுநிலை தவருதவர்கள். எவ்வாறு நடுநிலை தவருது நின்றவர்கள் சிவனுக விளங்குவர்.

(அ - சொ) கார் - கருமை. முகில் - மேகம். வண்ணன் - நிறமுடையவன். மறை - வேத ம். நான்மறை - நான்கு வேதம். நம்பன் - சிவபெருமான்.

(விளக்கம்) திருமாவின் நிறம் கருமை ஆதலின், அவனுக்கு மேகம் உவமை ஆயிற்று. உலகத்தைப் படைக்கை யில் பிரமன் வேதம் ஒதியே படைப்பன் ஆதலின், நான்மறை ஒதி என்று அவன் குறிக்கப்பட்டனன். இறைவனுக்குத் துாய இடம் தேவை. அந்தத் தூய இடம் நடுநிலையாளர் உளம்; ஆகவே நடுநிலையாளர் சிவன் ஆவர்.

கள் குடியர் கருத்தறியார் 100. உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்

வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுருர் தெள்உண்மை ஞானச் சிவயோகம் சேர்வுருர் கள்.உண்ணும் மாந்தர் கருத்தறி யாரோ. (இ - ள்) என்றும் உள்ள உண்மைப் பொருளாகிய பரம்பொருளை ஆராயமாட்டார், தம்மையும் தம்மை