பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

###

(இ - ள்) உலகைப் படைப்பவர் சிவன் சத்தியாகிய இருவர்களே. இவ்விருவரின் பிள்ளைகள் ஐவர். அவர் களுள் தாமரை மலரில் உள்ள பிரமனே பூமியைப் படைக் கும் புண்ணியன். -

(அ - சொ) புவனம் - உலகம். ஒருவன் - ஒப்பற்ற சிவன், ஒருவன் - ஒப்பற்ற சத்தி, பூமிசையான் - தா. ம. ைர மலரில் உள்ள பிரமன்.

(விளக்கம்) ஐவர் என்பவர் பிரமன், விஷ்ணு உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்பவர். இவர்கள் முறையே உலகைப் படைத்தலும், காத்தலும், அழித்தலும் : மறைத்தலும், அருளலும் ஆகிய தொழிலே நடத்துபவர்கள். முதல் தொழிலாகிய படைப்பினைப் பிரமன் செய்தலின் அவன். புண்ணியன் ஆயினன், இவ் ஐவரும் சிவசக்தி ஆணையின்படி நடப்பவர் ஆதலின் இவர்கள் அவ்விருவர்க்கும் புத்திரர் ஆவார்.

சிவபரஞ்சுடர் ஒன்றே முத்தொழில் புரியும்

112. ஒருவனு ம்ே.உல. கேழும் படைத்தான்

ஒருவனு மேஉல் கேழும் அளித்தான் ஒருவனு மேஉல கேழும் துடைத்தான் ஒருவனு மேஉட லோடுயிர் தானே. . (இ - ள்) சிவனுகிய ஒருவன்தான் ஏழ் உலகங்களையும் படைத்தவன். அவனே அவற்றைக் காப்பாற்றியவன். அவனே அவற்றை அழித்தவன். அவனே உடலோடு உயிராய் ஒன்றி இருப்பவன். -

(அ - சொ) ஒருவன் . ஒப்பற்ற சிவன். அளித்தான் - காப் பாற்றினன். துடைத்தான் - அழித்தான். - -

(விளக்கம்) இறைவன் முழுமுதற் பரம்பொருளாய் விளங்கும்போது, பரமன் பரசிவன் எனப்படுவான். அவனே அயனப் படைப்பான்; அரியாய் காப்பான்; அரய்ை