பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

1&#

அழிப்பான். அரன் என்பான் ஈண்டு உருத்திரன். உருத்திரனும் சிவமும் ஒன்றெனல் கூடாது. உருத்திரன் மும்மூர்த்திகளில் ஒருவன். இதனை அறியாது உருத்திரனே சிவன் என்பர். அவர் உண்மை அறியாதவர். ஒவ்வொரு உயிரிலும் கலந்திருப்பவனும் இறைவனே.

அரனும் அரியும் சேர்ந்தே உலகப் பிறப்பு நிகழ்கிறது 113. செந்தா மரை வண்ணன் தீவண்ணன் எம்இறை மஞ்சார் முகில்வண்ணன் மாயம்செய் பாசத்துக் கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்து மைந்தார் பிறவி அமைத்துகின் ருனே. (இ - ள்) சிவந்த தாமரை மலர்போன்ற நிறமான தீ வண்ணளுகிய எமது இறைவனும், வலிமை மிக்க மேக நிறத்தினை திருமாலும் கூடி விளேத்த மாயாகாரியமாகிய காதலால், உலகில் மலர்க்கொத்தைச் சூடிய கூந்தலை யுடய மாதர்கள் ஆண்களுடன் கூடிய கூட்டத்தால் உலகில் பிறவி என்பது அழகிய மாலே போலத் தொடர்ந்து உண்டாக இறைவன் அமைத்து நின்முன்.

(அ - சொ) வண்ணன் - நிறத்தன். இறை - தலைவன். மஞ்சு - வலிமை. ஆர் - பொருந்திய முகில் - மேகம். மாயம் - மாயகாரியம். பாசம் - காதல், கொத்து - பூங்கொத்து, குழலியர் - கூந்தலையுடைய மாதர். அம் - அழகிய, தார் . மாலை. மைந்தார் - ஆண்கள்.

(விளக்கம்) அரன் ஆண்பால், அரி பெண்பால். நாராயணி என்பது சத்தியின் பெயரே ஆகும். ஆக அரி இறைவன் சத்திகளில் ஒன்று. அரியலால் தேவி இல்லை என்பது, ஆன்ருேர் வாக்கு. ஆகவே இந்த அரணும் ஆண் மகனும், அரியாம் பெண்மகளும் காதலால் கூடுவர். அக் கூட்டமே உலகில் மக்களிடைத் தோன்றி உலகில் பிறப்பு உண்டாகி வருகிறது. மோகினி வடிவுடன் திருமால்