பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

206

கூடியவர். இதல்ை இருமலமும் நீங்கப்பெறுபவர்கள். இவர்கள் மூவர். சகலர் ஆணவம் கன்மம், மாயை என்னும் மூன்று மலமும் உடையவர். இவர்கட்கு இறைவன் குருவடிவிலே வந்து உபதேசிப்பன். அதுபோது மும்மலங்கள் நீங்கும். இவர்கள் மூவா.

பாத்திரம் அறிந்து பிச்சை இடவேண்டும்

133. திலம்அத்தனைபொன் சிவஞானிக் கீந்தால்

மலமுத்தி சித்தி பரயோக மும்தரும் நிலம்அத் தனையொன்னை நின்மூடர்க் கீந்தால் பலமுமற் றேபர போகமும் குன்றுமே. (இ - ள்) எள்ளளவு பொன்னைச் சிவஞானிக்குக் கொடுத்தால், அதன் பயனல் மோட்சமும் சித்திகளும் இன்பமும் உண்டாகும். பூமி அளவு பெரும் பொன்னை அஞ் ஞானிகட்குக் கொடுத்தால் பயன் இல்லை; போக போக்கிய மும் குறையும்.

(அ சொ) திலம் - எள். பலன் - பயன். முத்தி . மோட்சம். சித்தி - சித்திகள். பர - மேலான போகம் . இன்பம். நின்மூடர் - அஞ்ஞானிகள்.

(விளக்கம்) திலம், நிலம் என்பன சிறுமை பெருமைகளைக் காட்ட வந்த உதாரணச் சொற்கள். தினை, பனை என்ற உவமையும் காட்டுவர் அறிஞர். ஈவதைத் தகுதி அறிந்தே ஈயவேண்டும் என்பது ஈண்டுக் கூறப்பட்டது.

காலன் இருத்தலை அறிந்து கண்ணுதலை நாடவேண்டும் 139. கண்டிருந் தாருயிர் உண்டிடும் காலனக்

கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை கன்றுணர்ந் தார்க்கருள் செய்திடும் நாதனைச் சென்றுணர்ந் தார்சிலர் தேவரும் ஆமே.