பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

25?

அறிவால் அடங்கி இருத்தல்; ஞானத்தில் மிக்கு விளங் குதல்: இறைவனது மகா மந்திரத்தை முனு முணுத்துக் கொண்டிருத்தல்; யோக சித்திகளைப் பற்றித் தம்மினும் ஆராய்ச்சியுடையவரிடம் கேட்டல்; உள்ளம் சலியாது ஒரே நிலையில் இருத்தல். -

(அ- சொ) அணங்கு வருத்தும் தன்மையுடைய ஆசை. அற்றம் ஆதல் - சோர்வு விளைத்தல். அருஞ்சனம் - அருமை யான மனைவி மக்கள் முதலானவர்கள். நீவல் - நீக்கல். மிகுத்தல் - மிக்கிருத்தல் சிணுங்குற்ற - சதா வாய்க்குள் சொல்லிக் கொண்டிருத்தல். நுணங்கு அற்று - உள்ளம் சலியாமல்.

(விளக்கம்) கல்வி எவ்வளவு உயரினும், பணிவே தோன்ற வேண்டும். ஆதலின் வணங்குற்ற கல்வி' எனப் பட்டது. மாஞானம்’ என்பது ஈண்டுப் பரஞானத்தையாகும்; அதாவது மேலான பரமனைப் பற்றிய ஞானம். மந்திரத்தை வாய்விட்டுக் கூருமல் உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண் டிருக்க வேண்டும் ஆதலின், சினுக்குற்ற வாயர் எனப் பட்டது. ஈண்டுப் பஞ்சாட்சர மந்திரம் குறிக்கப்பட்டுள்ளது. அஷ்டாட்சர சடாட்சர மந்திரம் கூறினும் தவறில்லை.

இதுவும் யோகியர் செயல் 209. மரணம் சிறைவிடல் வண்பர காயம்

இரணம் சேர்பூமி இறந்தோர்க் களித்தல் அரணன் திருவரு ஆதல்மு வேழ்ஆம் கரனுறு கேள்வி கணக்கறிக் தோனே. (இ - ள்) மரணம் கிழத்தன்மை ஆகிய இவற்றை நீக்கல், பிற உடலில் புகுதல், சுவர்க்க இன்பத்தை இறந் தவர்கட்கு அளித்தல், பாதுகாவலாக இருக்கும் சிவன் வடிவைப் பெறுதல், இருபத்தொரு கிரணங்களையுடைய சிவ சூரியனது புகழினைக் கேட்டல் ஆகிய இவற்றின் கணக்கை நன்கு அறிந்தவன் சிறந்த யோகி ஆவான்.

த.-17