பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

£67

மணிநேரமாகும். இதல்ை பரியங்கி யோகத்தில் இரண்டு மணி நேரம் இருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகிறது. இறைவியின் திருவருள் பெற இவ்யோகம் பயன்படும் என்பதை இம்மந்திரம் கூறுகிறது.

சிறுநீரின் சிறப்பு 22. தெளிதரும் இந்தச் சிவர்ே பருகில்

ஒளிதரும் ஓர்ஆண்டில் ஊனம்ஒன் றில்லை. வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும் களிதரும் காயம் கனகம தாமே. (இ - ள்) தெளிவினையுடைய இந்தச் சிவநீரைக் குடித்தால், ஒர் ஆண்டிற்குள் உடலில் ஒருவித ஒளி உண் டாகும். உடலுக்கு அழிவு வராது. பிராணனாகிய அகார மும், மனமும் ஒடுங்கும். மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் பொன்மயமாக விளங்கும்,

(அ - சொ) சிவநீர் - மூத்திரம். பருகில் - குடித்தால். ஒளி - சிவ ஒளி. ஆண்டு - வருடம். ஊனம் - அழிவு; துன்பம். வளி - பிராணவாயு. களி - மகிழ்வு. காயம் - உடம்பு. கனகம் - பொன். -

(விளக்கம்) மூத்திரம் சிவநீர், அமரி, அமுரி, சிறுநீர், அமுத நீர் என்று வைத்திய நூலிலும், சித்தர் பாடல்களிலும் கூறப்படும். இதனைப் பருகு வ தால் ஏற்படும் பயன் இம்மந்திரத்தில் கூறப்படுகிறது. அவர் அவர்களின் உடலில் தோன்றும் சிறுநீரைப் பருகுதல் பற்றிய குறிப்பே இங்குக் குறிக்கப்படுகிறது. அவர் அவர் விடும் காலை மூத்திரத்தில் முதல் பகுதியில் பித்தமும், கடைசிப் பகுதியில் சாரம் அற்ற நிலையும் இருப்பதால், நடுப்பகுதிச் சிறுநீரையே பருகுதல் வேண்டும். இவ்வாறு செய்வதால் துன்பம் இல்லை. உயிர் கலங்காது. உயிரைக் காத்துக்கொள்ளவும் கூடும். தமிழில் எட்டு எண்ணக் குறிக்கும் எழுத்து 'அ': அதுவே ஈண்டு எட்டு எனப்பட்டது. ->