பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

兹酸&

நரை மயிர் கறுக்க வழி 223, நூறுமிளகு நுகரும் சிவத்தின்கீர்

மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் தேறில் இதனைத் தெளிஉச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயிர் ஆகுமே. - - (இ - ள்) மக்களே, மூத்திரத்தை நூறு மிளகு அளவு குடியுங்கள். இதற்கு எதிரான மருந்து எதுவும் இல்லை. இதன் அருமை பெருமை தெரிந்து உச்சியில் அப்பிளுல், நரை மயிர் மாறும். அதற்கு மாருகக் கறுமயிர் தோன்றும்.

(அ - சொ) சிவத்தின் நீர் - மூத்திர நீர். - (விளக்கம்) மூத்திரத்தைப் பருகும்போது, ஒவ்வொரு நாளும் மிளகுடன் சேர்த்துப் பருகவேண்டும். அதாவது முதல் நாள் ஒரு மிளகுடனும், இரண்டாம் நாள் இரண்டு மிளகுடனும், இப்படி நூறு மிளகு வரையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மிளகாகக் கூட்டிப் பருகவேண்டும் என்பதாம்.

தலைமயிர் கறுக்க, உடம்பு மென்மையாக வழி

224, அனக கன்னுத லாய்ஒர் அதிசயம்

களவு காயம் கலந்தஇக் கீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் இளகும் மேனி இருளும் காயமும். (இ - ள்) கூந்தலையும், நல்ல நெற்றியையும் உடைய பெண்ணே நான் உனக்கு ஒர் அதிசயம் சொல்லப் போகின்றேன் கேள். உடலில் மறைவாகக் கலந்துள்ள இந்தச் சிவநீராகிய மூத்திர நீரிலே மிளகு, நெல்லிக் கனி, மஞ்சள், வேப்பிலே ஆகிய இவற்றை ஒன்று சேர்த்து இடித்த பொடியை கலந்து பருகினல் சதை பருத்த உடல் மென்மை அடையும். தலையில் உள்ள நரை மயிரும் கருக்கும்.