பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281

盛8座

சுத்த சைவர் யார் 242. வேடம் கடந்து விகிர்தன் தன்பால்மேவி ஆடம் பரம் இன்றி ஆசாபா சம்செற்றுப் பாடொன்றும் பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவயோ தகர்சுதத சைவரே. (இ - ள்) விபூதி உருத்திராக்கம் அணியும் வேடத்தில் உள்ள பற்றையும் விட்டு, இறைவனிடத்தை விரும்பி அடைந்து, ஆடம்பரம்இல்லாமல், ஆசையாகிய பந்தத்தை நீக்கி, துன்பத்தோடு கூடிய பாசமும், ஆன்ம அறிவும் கெடும்படி அடித்துத் தொலைக்கும் சிவஞானம் பெற்றவரே சுத்த சைவர் ஆவார். -

(அ - சொ) விகிர்தன் . இறைவன். தன்பால் - அவனி டம். மேவி - விரும்பி அடைந்து. செற்று - நீக்கி. பாடு - துன்பம். ஒன்று. - பொருந்திய பாசம் - உலக பந்தம். பசுத்து வம் - சீவனுடைய சிற்றறிவு. சாடும் - அடித்துத் தொலைக்கும். சிவ போதர் - சிவஞானிகள்.

(விளக்கம்) விபூதி உருத்திராக்கம் அணியக் கூடாது என்பது பொருள் அன்று; இம்மந்திரத்தின் கருத்து, இவற்றை அணிந்தாலே போதும், சுத்த சைவர் எனப்படுவோம்’ என்று அவற்றில் மட்டும் பற்று வைத்திருப்பாருக்கு அறிவுறுத்தவே எழுந்தது இம்மந்திரம். விகிர்தன் - வியக்கும்படி செயல்களைச் செய்யும் இறைவன். பல் வேறு உலகங்களை, உயிர்களைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருள்செய்து வருதலின் அவன் விகிர்தன் எனப்பட்டான்.

நால்வகைப் பூசை 243. உயிர்க்குயி ராய்கிற்றல் ஒண்ஞானப் பூசை உயிர்க்கொளி நோக்கல் மகாயோகப் பூசை

உயிாப்பெறும் ஆவா கனம்புறப் பூசை செயின்கடை கேசம் சிவபூசை ஆமே.