பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

336

(இ - ள்) நான் அறிவு வடிவாய் இருக்கிறேன் என்பதை உணராமல், பல நாள் இருந்தேன். அப்படி இருந்த என்ன, எனது குருநாதன், 'நீ அறிவாய் இருக் கிருய் என்று அருள் உபதேசம் செய்தபின், நான் அருள் வடிவென்று அக் குருநாதன் அருளால் அறிந்தேன். அறிந்து அறிவாகவே விளங்குகின்றேன்.

(அ - சொ) நந்தி - குருநாதன். (விளக்கம்) சுடர் விளக்காயினும் துரண்டுகோல் வேண்டும். ஆகவே, நாம் எவ்வளவு உணர்ச்சியுடையவர் களாயினும், நம்மைத் தெளிவிக்க வேண்டியவர் ஒருவர் தேவை. அவரே குருநாதர். அக் குருவருளால் நம்மை நாம் உணரலாம் என்பதை விளக்குவது இம்மந்திரம்.

அறிவின் மாண்பு

314. அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை

அறிவிக் கறிவல்ல தாதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்ற தென்றிட்டு அறைகின் றணமறை ஈறுகள் தாமே. (இ - ள்) அறிவுக்கு அழிவு கிடையாது. அதற்குத் தோற்றமும் இல்லை. அறிவுக்கு அறிவுதான் ஆதாரம். அறிவே அறிவை அறியும் என்று வேத உபநிஷதங்கள் கூறு கின்றன.

(அ - சொ) ஆக்கம் - தோற்றம். ஆதாரம் - சார்பு. மறை ஈறுகள் - வேதத்தின் முடிவுகள், உபநிடதங்கள். அறைகின்றன - கூறுகின்றன.

(விளக்கம்) அறிவு, பரம்பொருள். அதற்குத் தோற்றம் முடிவு இல்லை. அந்த அறிவுதான் எல்லாவற்றையும் உணர்ந்து செயல் படுத்துகின்றது. இதுவே வேத உபநிடதங்களின் முடிபு. மறை ஈறு என்பது ஆகமத்தையும் உணர்த்தும். ஆகமங்களின் முடியும், அறிவாகிய பரம்பொருளே அனைத்தை யும் செயல்படுத்துகின்றன என்பது என்பர்.