பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357

357

-56,ನಿ, Pr முதலியன கருப்பு ஏறில் மரணம்

352. கொண்டிடும் தோடக்குறி சொன்னுர் என்நந்தி

தண்டும் உதடும் தனிப்பல்லும் நாக்கொன்ரும் மண்டிடும்தாது வனமாய்க் கருப்பேறில் ஒண்டிடும்.ஆருமநாள் உறுதியாய்ச் சாவனே. (இ- ள்) எனது குருநாதனும் நந்தியம் பெருமான் மரணக்குறி பற்றி மேலும் கூறினர். அதாவது ஒன்ருே டொன்று சேரும் உதடும், பல்லும், நாக்கும் கருப்பு நிறமாக மாறிவரின், தாதுக்கள் வளம் ஒடுங்கி, ஆறு நாட்களில் நிச்சயமாய் இறந்து படுவான் என்பதாம்.

(அ - சொ) நந்தி - குருநாதன். தண்டும் - ஒன்ருே டொன்று தட்டுப்படுகிற, தனி - ஒப்பற்ற, மண்டிடும் - நெருங்கி இருக்கும். ஒண்டிடும் - ஒடுங்கி.

(விளக்கம்) தாதுக்கள் என்பன, ஏழு தாதுக்களாகும். அவை, அன்னரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு மூளை, சுக்கிலம் என்பாரும் உளர். பல் போனல் சொல்

போகும். ஆதலின் அதன் பெருமை தோன்றத் தனிப் புல் என்றனர். - -

சாகாக் குறி

353. சீவக் கல்யால் சிறந்திடும் நாடிதான்

ஆவக் கரம்வைத் தழுத்திடில் மேல்ஏறும்

தாஒத்து மேல்நோக்கில் சாகான் ஒருநாளும்

பாஒத்துக் கீழ்நோக்கில் பதையாமல் சாவானே. -

(இ - ள்) சீவக்கலையால் பெருமை பெற்றிடும் வாத பித்த, சிலேத்தும் நாடிகளின்மேல் கை வைத்து அவற்றின் துடிப்பை அறிகின்றபோது, வாத நாடி மேல் நோக்கி நடக்குமானல், இறப்பின அணுகான். ஆனல் அவ்வாத நாடி பாகுபோல் கரைந்து:கீழ் நோக்கி நடந்தால் துன்பும் இன்றி இறப்பன்.