பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

#7

ஞரும், 'தெய்வத் திருவள்ளுவர்' எனத் தேனிக் குடிக்கீரஞரும், 'நாப்புலமை வள்ளுவளுர்’ எனக் கவுணியனரும் புகழ்த் துள்ளனர். தெய்வப் புலமைத் திருவள்ளுவனுர் எனத் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளும் போற்றியுள்ளார். திருக் குறளின் சிறப்பைக் கூற வந்த திருவள்ளுவ மாலை என்னும் நூல் "அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவளுர் முப்பால் மொழி மூழ்குவார்' என்னும் "மண் இன்று அளந்தது குறள்' என்றும்,

"ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்

பாயிரத்தி சூேடு பகர்ந்ததன்பின்-போயொருத்தர் வாய்கேட்க நூலுனவோ? மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.' என்றும், "வள்ளுவளுர் முப்பாலின் மிக்க மொழியுண்டு, எனப் பகர்வார் எப்பாவலரினும் இல்', 'உள்ளுதொறுளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு” என்றும், "எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்’ எனவும், "வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு” எனவும். திருவள்ளுவர் குறள் வெண்பாவில் சிறந்திடும் முப்பால்”, எனவும், உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு.” எனவும், உள்ளிருள் நீக்கும் விளக்கு’ எனவும், "உள்ளக் கமலம் மலர்த்தி உளத் துள்ள தள்ளற்கு அரியஇருள் தள்ளுதலால்-வள்ளுவளுர் வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்' எனவும், சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்னிேய வந்த இரு வினைக்கு மா மருந்து-வள்ளுவனர் பன்னிய இன்குறள் வெண்பா' எனவும், "வள்ளுவர் பன்னிய இன்குறள் வெண்பா அகிலத்தோர் உள்ளிருள் நீக்கும் ஒளி' எனவும், வள்ளுவம் பாட்டின் வளம் உரைக்கின் வாய்மடுக்கும் தென் அமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்” எனவும் வாயாரப் போற்றிப் புகழ்கிறது. ஆகவே, இவ்விரு பெரியோர்களின் ஒத்த கருத் துக்களை நாம் நன்கு உணர்ந்து அவற்றின்படி ஒழுகல் நம் கடனுகும்.