பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0

விளங்குற்ற அறிவுவளம், உரிமை வேட்கை,

வீரமிக்க துணிவுள்ளம், இன்னோ ரன்ன

களங்க மறு நறுமலர்கள் மலரச் செய்யும்

கவிஞனவன் பெய்ததமிழ் மழைநீ ரெல்லாம்.

எங்கள்சுதந்திரதாகம் தணிவ தெந்தாள்?

என்றேங்கும் பொழுதத்துத் தாகம் தீர்க்கச்

சிங்கமகன் கோடைமழை யாக வந்தான்;

செந்தமிழர் திருநாட்டைப் பாடும் போது

பொங்கிவருங் காலமழை யாகி நின்றான்;

புதுமுறையில் பாஞ்சாலி சபதம் பாடிப்

பங்கமறப் பொதுநெறியில் தெய்வப் பாடற்

பண்பாடி அடைமழையாய்ப் பொழிந்து நின்றான்.

பாரதிபெய் தமிழ்மழையால் சாவா தின்னும்

பாட்டுலகம் வழங்கிவரும் கார ணத்தால்

வாரமிகும் அம்மழையை அமிழ்தம் என்றே

வாய்மணக்கச் சொல்லிடலாம்; பாடல் என்னும்

ஈரமழை பெய்யாது பொய்த்தி ருந்தால்

இனியகவிக் கடலுந்தன் னிர்மை குன்றும்;

நேரமெலாந் தன்னுரிமைப் பசியே வந்து

நின்றிருந்து நமைவருத்தி உடற்றும் அன்றோ?

1O1

10

வாரம் - அன்பு