பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO 9 தமிழ் முழக்கம் 9

கள்ளெடுத்துத் தீயெடுத்துச் சேர்த்து நல்ல

காற்றெடுத்து வான்வெளியும் கலந்து வைத்துத் தெள்ளுதமிழ்ப் பெரும்புலவன் கவிதை யாக்கித்

தீந்திமிதீம் எனமுழங்கிப் பெய்தான் நீரின் அள்ளுசுவைப் பெருமைஎலாம் சுருங்கக் கூறின்

அகங்கவருமெண்சுவையும் பொருந்தி நிற்கும்; துள்ளிவரும் உணர்ச்சியினால் வேகங் காட்டுந்

தொடர்மழையில் நனைந்தவர்க்கு வீரந் தோன்றும். 6

பொதுவுடைமைச் செம்புலத்துப் பெய்யும் போது புத்துலகச் செம்மைநிறம் பொருந்தி நிற்கும்; மதியுடைமைக் கார்நிலத்திற் கொட்டுங் காலை

மலர்ந்திருக்குங் கருவண்ணம்; கருமை செம்மை பொதுளியநற் பூமிதனில் பொழியும் போது

பூத்திருக்கும் இருவண்ணம்; மதத்திற் பெய்தால் அதனுடைய வண்ணமுமாய்க் காட்சி நல்கும்;

அமரகவி பெய்ததமிழ் மழைநீரெல்லாம். 7

பழங்குப்பை கூளமெலாம் அடித்துச் செல்லும்;

பகுத்தறிவுப் புலத்தையது குளிரச் செய்யும்: வளங்கெட்ட வறுமையுடன் செல்வ மென்று

வருமேடு பள்ளமெலாம் சமப்படுத்தும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/99&oldid=571705" இலிருந்து மீள்விக்கப்பட்டது