பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 99

அடிமைஎனுங் கொடுவெயிலின் வெம்மை தாக்க

அகம்.வறண்டு, செயல்திரிந்து, பொருள்நீர் வற்றி, மிடிமைஎனும் வெடிப்புற்றுத் தொடர்ந்து வந்த

மேலான உரங்கெட்டுத் தொழில்கள் என்னும் செடிகொடிகள் அடிவதங்கி, உரிமை என்னும்

செழும்பயிர்கள் மிகவாடி, மயங்குங் காலை இடியுடைய கோடைமழை போல வந்தான்

இந்நாடு செழித்துயரப் பொழிந்து நின்றான். 3

தலைவரெனும் உழவரெலாம் சொல்லேர் கொண்டு

தாய்நாட்டார் மனப்புலத்தைப் பண்படுத்தி, நிலையுடைய உரிமையுணர் வென்னும் வித்தை

நிலமெல்லாந்துவிவிட்டார்; அந்தப் போழ்து கலையுணரும் பாரதியாம் மேகந் தோன்றிக்

கவிமழையை நிலங்குளிரப் பொழியக் கண்டோம்; விலைமதியா விடுதலையாம் பயிர்செழித்து

விளைபயனும் நனிநல்கி வளரக் கண்டோம். 4

சேர்த்தெடுத்த சொல்விளங்குங் கவிதை வானில்

திரிந்துவரும் பாரதியாம் எழில்சேர் கொண்டல் கார்த்தொடுப்பால் இடியிடித்துப் பொழிதல் போலக்

கவித்தொடுப்பால் உணர்ச்சியினை முழக்கி, மின்னி, ஆர்த்தடித்த தமிழ்மழையால் திரண்ட வெள்ளம்

ஆங்கிலத்தார் அடித்துவைத்த கூடாரத்தைப் பேர்த்தெடுத்துத் தள்ளியதை அறியா ருண்டோ?

பெருமழையின் ஆற்றலினைத் தெரியா ருண்டோ? 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/98&oldid=571704" இலிருந்து மீள்விக்கப்பட்டது