பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O2 9 தமிழ் முழக்கம் 9

ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடி வந்த

அடலேற்றுப் பெரும்புலவன் வேட்டெழுந்து

சீர்ப்பாட்டுத் தமிழ்மழையைப் பெய்யா விட்டால்

செந்தமிழர் நெஞ்சமெலாம் வாடி நிற்கும்:

ஏர்ப்பாட்டுப் பாடாமல் ஓய்ந்தி ருக்கும்;

இன்பமலர் சாய்ந்திருக்கும், எழுச்சி யூட்டும்

போர்ப்பாட்டு மொழியுணர்ச்சி என்னும் பச்சைப்

புல்நுனியுங் காண்பரிதாய்க் காய்ந்தி ருக்கும்.

'பாமரரே! விலங்குகளே! பான்மை கெட்டீர்!

பார்வைதனை யிழந்துவிட்டீர் செவிடும் ஆனிர்

நாமமது தமிழரென வாழ்வீர்!’ என்று

நாமுணர இடித்திடித்துப் பொழிந்த போதும் ஏமமுற வீட்டுமொழி கற்கு மெண்ணம்

எங்கணுமே மலரவில்லை; வேறு வேறு தீமொழியே பயில்கின்ற விழல்கள் இன்னும்

தெருவெல்லாம் வளர்வதையே காணுகின்றோம்.

'நெஞ்சமது பொறுக்கவிலை இந்த நாட்டு

நிலைகெட்ட மாந்தர்தமை நினைந்து விட்டால்

வஞ்சனைகள் புரிந்திடுவார் மானம் விட்டு

வாழ்வுக்கே அலைந்திடுவார்; பிறப்புக் குள்ளே

கொஞ்சமோ பிரிவினைகள்?' என்று கண்ணிர்

கொட்டுதமிழ் மழைபொழிந்தும் ஒற்று மைக்கு

11

12