பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 69

அண்டைப் பிறநாட்டார் அண்டிவருங் காட்சியைப்பார்: - நீலத் திரைக்கடலில் நீந்திவருங் கப்பலுடன் கோலத் திருமுகத்தன் கொள்கைப் பெருங்கோமான் செந்தமிழன் வீர சிதம்பரன் நிற்கின்றான் இந்தநிலை கண்டுணர்தல் இன்றைக்குத் தேவையடா: செஞ்சிக்கோன் தந்த செழுங்கோட்டை மாட்சியிது; வஞ்சிக்கோன் தம்பிமுதல் வார்த்தெடுத்த காப்பியங்கள் 80 ஐந்து மகவாக ஆங்கே அருகிருக்க மைந்துடன்நான் நிற்கின்ற மாண்புயர்ந்த காட்சியிது; ஆறுபடைவீடெழுப்பி ஆங்கருகில் நக்கீரன் வீறுபெற நிற்கும் விறல்மிகுந்த காட்சியைப்பார்: பாவை நலம்பாடிப் பள்ளிகொளும் ஆரணங்கைப் பாவை துயிலெழுப்பும் பாங்கினையும் ஈங்கேக.ண்; மாமல்லைக் காட்சி, மனுநீதிச் சோழனொடு பூமுல்லை தேர்பெற்ற பொற்பினையும் காணுகநீ; பாரெல்லாம் என்பெயரைப் பாடிப் புகழ்ந்தேத்தச் சீரெல்லாஞ் செய்துவரும் செம்மையுளத்தானாம் 90 உன்னண்ணன், நல்லெண்ணம் ஓங்கிவரும் நல்லண்ணன், என்கண்ணன் ஆங்கே எழிலுடனே நிற்கின்ற தோற்றத்தைக் காட்டுகிற துய சிலையுருவின் ஏற்றத்தைக் கண்டுமகிழ்' என்றாள் தமிழன்னை:

ஊர்வலத்தைக் கண்டேன் உணர்ச்சி வயப்பட்டேன்

பேருளத்தில் இன்பமிகப் பெற்று.

  • . - உலகத்தமிழ் மாநாடு o 1 - o சென்னை - o ...। 6.1. 1968

அண்ணன் - பேரறிஞர் அண்ணா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/68&oldid=571674" இலிருந்து மீள்விக்கப்பட்டது