பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

நெல்லின் கதை

கலிவெண்பா

ஆண்டவற்கோர் ஆயிரம்பேர் ஆமென்பர் நெல்லெனும்பேர் பூண்டிருக்கும் என்றனுக்கும் பூட்டுந் திருநாமம் எண்ணிலடங்காதிங் கேடெடுத்தாற் போதாது; மண்ணிற் பெருகிவரும் மாண்பினைநான் கூறுகிறேன்; சீரகத்துச் சம்பா சிறுமணிநல் சித்தடியான் ஊரகத்தார் போற்றுகிற உய்யக்கொண் டானென்பர்; அம்பா சமுத்திரம் ஆலைமிகு கோவைதருஞ் சம்பா எனஎன்னைச் சாற்றிப் புகழ்வதுண்டு; கார்த்திகைச் சம்பா கருடன்சம் பாவென்று நேர்த்தியுடன் என்னை நினைப்பவரும் உண்டு; 10 குதிரைவால் நல்யானைக் கொம்பனுடன் தங்கம் புதுவகைய மல்லிகை போகிணி o / s]கைவிரைச் சம்பாவாய்க் காட்சியளிப்பதுண்டு; செய்விளையும் என்றனுக்குச் செப்பும்பேர் இன்னுமுண்டு: முத்துவெள்ளை கட்டைவெள்ளை மொய்க்குங் கொடிவெள்ளை சித்திரைக்கார் வெள்ளைக்கார் செப்பும் மணல்வாரி

பூங்கார் கருங்குறுவை பூம்பாளைப் பேரெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/69&oldid=571675" இலிருந்து மீள்விக்கப்பட்டது