பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 9 தமிழ் முழக்கம் 9

கூடாதென மறுத்துக் கூறிடுவார் யாருமில்லை; தஞ்சைத் தரணியிற்றான் என்றன் தனியாட்சி நஞ்சைப் புலமெல்லாம் நல்லாட்சி செய்திடுவேன்; காராளர் வந்தாடிப் பட்டமெனைச் சூட்டிடுவார். ஊராளும் நல்லமைச்சர் உண்டு துணையாக; 50 நானாளும் நன்னிலத்தை நச்சாக்க நல்லவரைப் போல்நாளும் வந்துபுகின் பொங்கிக் களையெடுப்பேன்; எல்லைஎன்று முள்வேலி இட்டே எனதுநிலம் தொல்லை.ஒன்றுங் காணாமல் தொன்றுமுதல் காத்திருப்பேன்; பொன்னகரைச் சுற்றிப் புறமதில்கள் வேண்டுமன்றோ? முன்வளைத்த நால்வரப்பும் மொய்ம்புடைய கோட்டைகளாம்; நெல்லுக்கே என்றிறைத்த நீரைக் கருணையினால் புல்லுக்கும் ஆங்கே பொசியவைப்பேன்; அக்கருணை போற்றாமல் என்னைப் புறக்கணித்து வந்தவிழல் சேற்றோடு சேறாகச் சீரழியச் செய்துவிடப் 60 போராடும் காராளர் பொன்றாக் களமறவர் ஏராளம் ஏராளம் என்பாற் பணிபுரிவார்; மண்ணின் வலிமைமிகும் மார்பைப் பிளந்தெறியும் எண்ணில் உழுகலங்கள் எல்லாம் படைக்கலங்கள்: நாட்டை வலுப்படுத்த நான்விரும்பி எத்தனையோ கோட்டை புகுந்தங்குக் கொண்டதுண்டு வெற்றிபல; ஆர்க்கும் ஒலியோ டணிவகுத்து நிற்கின்ற போர்க்களங்கள் போய்ப்புகுந்து போர்விளைத்து வந்தவன்நான் இத்தனையும் பெற்றுள்ள என்னை அரசனெனச் சொற்றமொழி யாரே துணிந்து மறுத்துரைப்பார்? 70 நெல்லேருழவரெனும் நேரியரிங் கில்லை.எனில் வில்லேருழவரெங்கே? சொல்லேருழவரெங்கே?

இவ்வண்ணம் என்பெருமை எவ்வளவோ ஈங்குளவாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/71&oldid=571677" இலிருந்து மீள்விக்கப்பட்டது