பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கவியரசர் முடியரசன் 0 73

அவ்வளவும் சொல்லில் அடங்கிடுமோ? என்றாலும் ஏனோ பதரென்றே என்குலத்தைத் துற்றுகின்றார்? நானோஇம் மாந்தர் நகைப்பிற் கிடமானேன்? மக்களிலே மிக்கபதர் வாழ்வதனைக் கண்டிருந்தும் தொக்கஅவர் கூட்டத்தைத் தூற்றா திருக்கின்றார்; வைக்கோலாய் மற்றும் உமிதவிடாய் வந்தாலும் எக்காலும் அவ்வடிவில் என்னால் உதவியுண்டு; 80 மக்கள் பதரானால் மாநிலத்தில் யாருக்கும் தக்க உதவி தருவாரோ? தந்ததிலை: உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் என்றென்னைப் பண்டொருவர் நன்முறையிற் பாராட்டிச் சொன்னாலும் நெஞ்சந் துணிந்தொருவர் நெல்லுமுயிர் அன்றென்று வெஞ்சொல் மொழிந்தென்றன் விஞ்சு புகழ்குறைத்தார்; செல்வமென என்னைத்தான் செப்பிடுவர் முன்பெல்லாம் வல்வினையர் செல்வமென மற்றவற்றை இன்றுரைப்பர்; காராளர் ஒட்டுங் கலப்பை வகுத்தவழி நீராலே வாழ்ந்து நிலத்தில் இடுந்தழையால் 90 நாளும் உரம்பெற்று நன்கு செழித்தோங்கி நீளும் பயிராய் நிமிர்ந்தெழிலாய் நின்றிருப்பேன்; பால்பற்றிச் சூல்முற்றிப் பையத் தலைகுனிவேன்; நூல்கற்ற பாவாணர் நுண்ணியதங் கற்பனையால் பற்பலவாக் கட்டுரைத்துப் பாடி மகிழ்ந்தார்கள்: எற்குற்ற ஓர்கவலை யாரே அறிவார்கள்? முற்ற முதிர்ந்தோமே முன்னே விதைத்தவர்கள் உற்றரி வாளுடனே ஓடி வருவாரே. வாளோடு வந்தவர்கள் தாளோ டரிவாரே தாளாலே கட்டித் தயங்கா தடிப்பாரே 100 மாடேற்றி என்தலையை வந்து மிதித்திடுவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/72&oldid=571678" இலிருந்து மீள்விக்கப்பட்டது