பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 9 தமிழ் முழக்கம் 9

சூடேற்றி வேகவைத்துத் தொல்லை தருவார்; இடிப்பார் அரைப்பார்என் தோலை உரிப்பார் கடிப்பார் உலையில் கருணையின்றி வேகவைப்பார்: மாவாக மாற்றி மனம்போன போக்கினிலே நாவாய் சுவைத்திடவே நாலுவகைப் பண்டங்கள் செய்வாரே என்றுளத்தில் சிந்தித்த காரணத்தால் வெய்தே உயிர்த்துமனம் வெம்பித் தலைசாய்த்தேன்; என்னை உருவாக்க எத்தனையோ பாடுபட்ட பொன்னன் குடிலுக்குட் போகவிட எண்ணாமல் 110 மன்னன் எனவாழ்வோன் மாமனைக்குக் கொண்டுசென் றென்னைக் களஞ்சியத்தில் இட்டு நிறைப்பாரே, போட்டு மறைப்பாரே பொல்லாங்குக் காரரென நாட்டு நடப்புணர்ந்து நான்தலையைத் தொங்கவிட்டேன்; மெய்யாகக் கற்றவர்க்கு மேலாம் உவமைசொலிப் பொய்வாய்ப் புலவர்மனம் போனபடி பாடிவிட்டார்; எத்தனைதான் என்னை இடர்ப்படுத்தி நின்றாலும் பித்துலகங் கொண்ட பெரும்பசியைப் போக்குதற்கே ஏற்றுள்ளேன் இம்மேனி, என்றும் பொதுநலமே போற்றிடுவேன் துன்பம் பொறுத்திடுவேன் ஈதுறுதி; 120 நாடெல்லாம் வாழ நனிதுயரம் நான்பெற்றேன் பாடெல்லாம் நான்வாழப் பட்டான் உழவன்மகன்; ஆனால் அவன்வாழ யாரே நினைக்கின்றார்? மேனாள் முதலாக மேழித் தொழிலுக்கும் அத்தொழிலை ஆற்றும் அருமை உழவர்க்கும் மெத்த புகழுண்டு மேன்மையுண்டு பாட்டினிலே, நாட்டினிலே மாறாய் நடப்பதைத்தான் காண்கின்றேன்; ஏட்டில் எழுதியதைக் காட்டிஎனை ஏய்க்கின்றார்;

நாணயத்தைச் சேர்ப்பதற்கு நாணயத்தை விற்றுவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/73&oldid=571679" இலிருந்து மீள்விக்கப்பட்டது