பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 9 91

எவர்வரினும் நம்புகின்ற தூய வுள்ளம்

இழிபொய்ம்மை சூதறியாக் குழந்தை யுள்ளம்

தவறெதுவும் தமிழ்மொழிக்குச் செய்வார் இங்கே

தலையெடுத்தால் சீறியெழும் புலிப்போத்துள்ளம்

சுவர்வைத்துத் தடுத்துநமைப் பிரித்து வைக்கும்

சூழ்ச்சிகளைச் சுட்டெரிக்கும் புரட்சி யுள்ளம்

கவிதையெனும் அமுதமழை பொழியு முள்ளம்

கருவடிவம் உறும்போதே கவிஞன் ஆனோன். 6

அதுவேண்டும் இதுவேண்டும் எனவிரும்பி

அடிவருடிப் பிழைக்கின்ற கயமை வேண்டான்; எதுவேண்டும் நாடுயர என்று நோக்கி

எழுச்சிமிகு கவிதைகளை ஈந்து நிற்பான்; மதுவேண்டும் வண்டெனவே மாறி மாறி

மாற்றார்க்கு வால்பிடித்துத் திரிய மாட்டான்; சதிவேண்டான் மற்றவரைத் தாழ்த்த எண்ணான்,

சங்கத்துப் புலவனென வாழ்ந்த மேலோன். 7

பாரிவிழா பறம்புமலை 18.4.197O

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/90&oldid=571696" இலிருந்து மீள்விக்கப்பட்டது