பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 7 93

குருட்டுலகில் இருட்டறையில் வாழ்வோர்க் கெல்லாம்

குடும்பவிளக்கேற்றியறி வொளியைத் தந்தான்; திருட்டுமனப் போக்கர்தமைச் செருக்க டக்கித்

தீந்தமிழை வளர்ப்பதற்கு வழியைச் சொல்லித் தெருட்டுகின்ற தமிழியக்கம் ஒன்று தந்தான்;

திரிகாற்று கதிர்திங்கள் இவற்றிலுள்ளே ് உருக்கொண்டு சிரிக்கின்ற அழக னைத்தும்

உருவாக்கி நமக்களித்தான் உலகம் போற்ற. 3

கூத்தடிக்க நாடகநூல் தந்தா னல்லன்

கொள்கைக்கே நாடகங்கள் எழுதித் தந்தான்; பூத்தொடுத்த குழல்மடவார் தம்மைத் தாழ்த்தும்

புன்மைகளை மாய்ப்பதற்கு வீரம் மிக்க பாத்திறத்தான் தமிழச்சி ஏந்தும் கத்தி

படைத்தளித்தான் நினைந்துநினைந்துள்ளம் பொங்க ஏத்தெடுக்கும் முத்திரையாய் விளங்க வேண்டி

எதிர்பாரா i-- தந்து வந்தான். /* 4

காவியங்கள் எனும்பெயரில் நல்ல நல்ல

கருத்துகளை உள்ளடக்கி நிலைத்து நிற்கும் ஒவியங்கள் பலதந்தான் பரிசி லாக

உயர்பாண்டி யன்பரிசில் எனும்நூல் தந்தான்; பூவியங்கும் செழுந்தேனோ? கரும்பின் சாறோ? புரட்சிக்கு நடும்வித்தோ என்று மக்கள் நாவியந்து போற்றுவணம் தொகுதி யாக

நல்லகவி மலர்தொடுத்து நமக்களித்தான். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/92&oldid=571698" இலிருந்து மீள்விக்கப்பட்டது