பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 9 தமிழ் முழக்கம் 9

பயில்கின்ற நெஞ்சமெலாம் வண்டாய் மொய்த்துப்

பைந்தமிழ்த்தேன் சுவைக்கின்ற முல்லைக் காடு; மயில்திரியும் தென்பொதிகைக் குற்றா லத்து

மலையிறங்குந் தேனருவி; துன்பம் என்னும் மயல்இரிய நம்முளத்தை இளமை யாக்கி

மகிழ்வுதரும் இசையமுது பாடித் தந்தான்; இயல்பினிலே அமைதியினன் எழுச்சி கொண்டால்

இரணியன்தான், எதிர்நிற்க எவரு மில்லை. 6

கொடைதந்தான் பாவேந்தன் பெற்றுக் கொண்டோம்:

கொடுத்தவற்றைப் பயன்படுத்தி வாழ்ந்த துண்டா? விடைதந்து தலைநிமிர்ந்து நிற்ப தற்கு

விதியுண்டா? மதியுண்டா? வெட்கம் வெட்கம்! படைதந்தான் வீரரென நமைநினைந்து:

பற்றியநாம் பேடியர்போல் நடுங்கு கின்றோம்; உடையுண்டு போனதலால் நமது வீரம்

ஒளியுண்டு நின்றதென உரைக்கப் GurGor? 7

ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆகிவரும் நாளை யிங்கு நாடப்பா ஏழைமுதலாளி என்ற

நாடகத்தைக் கலைத்தொழிக்க நாளும் எண்ணிப் பாடப்பா உலகப்பா உன்றன் பாட்டை

பார்மகிழப் போடப்பா புதிய பாட்டை! கேடப்பா மேல்கீழ்கள் என்று சொன்னான்

கேட்டிருந்தும் ஊமையப்பர் ஆகி நின்றோம். 8

புதியபாட்டை - புதுப்பாதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/93&oldid=571699" இலிருந்து மீள்விக்கப்பட்டது