பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கவியரசர் முடியரசன் 9

95

புதியதோர் உலகமினிப் படைப்போம் வாரீர்

பொசுங்கட்டும் கெடுதிதரும் பழைமை எல்லாம்; மதியதனை ஒளிசெய்வோம்; உயர்வு கொள்வோம்

மதம்சாதிக் கொடுமைகளை விட்டொழிப்போம்; விதியதனை நம்பிமனம் சோர்ந்து நின்று

வீணாகிப் போகாமல், பொதுமை காணும் விதியதனைச் செய்திடுவோம் என்றான்; நாமோ

விழிதிறக்க மனமின்றி உறங்குகின்றோம்.

தெற்கோதும் தேவாரம் ஆழ்வார் தந்த

திருவாய்நன் மொழியான தேனி ருக்கக் கற்கோவில் உட்புறத்தே புரியாப் பாடை

கால்வைத்த தெவ்வாறு? நெஞ்சுருக்கும் சொற்கோவின் நற்போற்றி அகவல் எங்கே?

தூயவர்தம் திருமொழிகள் இறைவன் காதில் நிற்காது போய்விடுமோ? என்று கேட்டான்;

நிற்கின்றோம் சிலையாக நாமும் சேர்ந்து.

தமிழ்நாட்டுப் பாடகரே தமிழைப் பாடித்

தமிழ்மானம் காத்திடுவீர் என்று சொன்னான்; அமிழ்துட்டும் தாய்மொழியைப் பாடா ராகி

அவர்மானம் தமிழ்மானம் அனைத்தும் விட்டார்; தமிழ்வேட்டுப் பாடுதற்கு முனைந்த பேரைத்

தமிழ்ப்பகைவர் படுகுழியில் அழுத்துகின்றார்; தமிழ்நாட்டு மாந்தரெனும் நாமும் சேர்ந்து

ததிங்கினத்தோம் போடுகின்றோம் மானம் கெட்டு.

10

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/94&oldid=571700" இலிருந்து மீள்விக்கப்பட்டது