பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

thence the fourfold divisions of Tamil Grammar; works on Prosody; want of study of Porul ; Tamil Rhetoric improved by Sanskrit; works on Tamil Rhetoric ; the fivefold division of Tamil Grammar completed; works treating of the fivefold division of Tamil Grammar: Pattiyal; metrical Somersaults; the gradual decay of Pattiyal and metrical Somersaults.

IV. ஐவகை யிலக்கணம்.

பாஷையாக்கம்; பாஷையடிக்கடி மாறுபடுதல்; இலக்கண வரம்பு வகுத்தல்; அகத்தியம் ; தொல்காப்பியம் ; மூவகை யிலக்கணம் ; பொருளிலக்கணத்தில் யாப் பணிகளடங்குமாறு; யாப்புத் தனிப்படப் பிரிந்து நால்வகையிலக்கணமாயினமை; யாப்பிலக்கண நூல்கள்; பொருளிலக்கண விலக்கியநூல்கள்; அணியிலக்கணம் ஆரிய மொழியால் விருத்தியாதல்; அணியிலக்கண நூல்கள் ; சித்திர மீமாஞ்சையுடையார் கூற்று: ஐவகையிலக்கணமும் முற்ற அமைந்தமை; ஐவகையிலக்கணமுங் கூறும் நூல்கள்; பாட்டியல்; மிறைக் கவிகள் ; பாட்டியலும் மிறைக்கவிகளும் பெரும்பாலும் அறிவுடையோராற் பாராட்டப்படாமை.




V.
THE ORIGIN AND THE ANTIQUITY OF THE LANGUAGE.

Natural language; sound as an instrument; the various ways in which words are formed; imitative, emotional, and symbolic ; the tongue-help to gesture language; the decay of gesture language at the increase of tongue-help; pronominal roots ; language a human product ; the opinion of the ancient Tamils on the origin of Tamil language ; how intelligibility was possible; what are ancient languages?: Tamil one of them; the opinions of Valmiki and Vyasa ; when language originated; classical writers on the antiquity of Tamil; Kumariland submerged ; Hæckel's view.

V. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்.

இயற்கைப்பாஷை; ஒலிக்கருவி; மொழித்தோற்றவகைகள்; போறல்வகை ; சுவைவகை; அறிகுறிவகை ; நாவின்சைகை கைச்சைகைகட்கு உதவியாயெழுந்தமை; நாவின் சைகை மேற்படக் கைச்சைகை வீழ்ந்துபடுதல்; தன்மை முன்னிலைப் பகுதிகள்; பாஷை மக்களாக்கப் பொருளென்பது; தமிழ்ப்பாஷையின் தோற்றத்தைப் பற்றி முந்தையோர்கூடற்று; பாஷை யாவருக்கும் ஒருங்கே விளங்கியவாறு; தொன் மொழிகள்; பிறர் தமிழின் தொன்மை மாட்சிகொண்டமை; வான்மீகி வியாத முனி