பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

முதற் கலக்கப் புகுந்தது துரானிய பாஷையே. சரித்திரவுண்மை யிவ்வாறா யிருத்தலின், தமிழ்ப்பாஷையைத் துரானிய பாஷையொடு சேர்த்து ஓரின் மாக்கிப் பாகுபாடு செய்தல் அசம்பாவிதமாம். இதுநிற்க, அக்காலத்திருந்த தமிழரின் நாகரிகாலை மிகவும் வியக்கத் தக்கதா யிருந்தது. அவர்கள் உழவுத் தொழிலில் மிகக் கைதேர்ந்தவர்; அதிகாரஞ் செலுத்து முறையும் நன்கறிந்தவர். ஆகவே அவர்கள் தமக்குள்ளே தலைவர்களை யேற்படுத்திக்கொண்டு அமைதியுடன் அரசாட்சி செய்யத் தொடங்கினர். இவ்வாறு அமைதியுற்ற காலங்களே தேசாபி விருத்திக்கும், பாஷாபிவிருத்திக்கும் ஏற்றனவாம்; ஆதலின் தமிழ்நாடும் ஓங்கிவளர்வதா யிற்று; அதனோடு அருமையான சிற்சில தமிழ் நூல்களுஞ் செய்யுளுருவத்தில் ஏற்படுவனவாயின. தமிழர்கள் படைக்கலப் பயிற்சிசெய்து தெற்கே படையெடுத்துச் சென்று பல நூற்றுக்காவத நிலங்களைத் தமவாக்கிக்கொண்டு தமிழ் மொழியை ஆங்கெல்லாம் பரப்பினர். இவ்வாறு தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமாத்திரா ஜாவா முதலிய தீவுகளை யுள்ளடக்கிய பெருநிலப் பரப்புமாயிருந்தது. இதற்குக் ‘குமரிநாடு’ என்பது பெயர். தமிழர்களை வென்ற துரானியர் தொகை வரவரச் சுருங்கப் புகுந்தமையின், தமிழரே தலையெடுத்துத் தமிழ் மொழியையே யாண்டும் பரப்பி ஆளுவாராயினர்.

இப்படி யிருந்தவருஞ் சமயத்தில், வடமேற்கே பல்லாயிரக் காவதத் திற்கு அப்புறமுள்ளதும், ஐரோப்பாக் கண்டத்தி னொரு பகுதியுமாகிய ‘ஸ்காந்திநேவியம்’ என்ற இடத்தினின்றும் ‘ஆரியர்’ என்ற சாதியார் புறப்பட்டு நாலா பக்கங்களிலுஞ் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள ‘துருக்கிஸ்தானம்’ என்ற இடத்திற்றங்கினர். இவ்விடத்தங்கிய ஆரியர்களே ‘கைபர் கணவாய்’ வழியாக இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ? இதனையறிவுடையோர் எளிதிலுணர்ந்து கொள்வார்கள்.

இவ்வாறு ஆரியர்கள் பெரும் பிரயாணஞ்செய்து பற்பல விடங்கட்கும் பிரிந்துபோனமையால் அவர்களது பாஷையாகிய ‘ஆரிய’மும் பல்வேறு வகை யினவாயின. அவை ‘இலத்தீன்’, ‘கிரீக்கு’, ‘சமஸ்கிருதம்’, ‘எபிரேயம்’ என்பனவாம். இவற்றினுள் ‘சமஸ்கிருதம்’ பேசும் ஆரியரே இந்தியாவிற்கு வந்தனர். வந்து இந்துஸ்தானத்திருந்த தமிழர்களையும் துபானியர்களையும் வென்று துரத்திவிட்டனர்.

இவ்வாரியர் இந்தியாவிற் புகுமுன்னரே, தென்மேற்றிசையிலுள்ள அரபிக்கடல் வழியாகத் தமிழர்கள் வாணிகஞ் செய்யத் தொடங்கினார்கள். மயிலினைக் குறிக்கும் ‘தோகை’ என்னுஞ் செந்தமிழ்ச்சொல் எபிரேய பாஷையில் ‘துகி’ என வழங்குதலுங்காண்க. வடமேற்றிசை வாணிகராகிய பினி