பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

பிரிந்தன. இதற்கிடையிலேதான் தமிழ்மொழியினின்று தெலுங்கு மலையாளம் கன்னடர் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.

இவ் வழிமொழிகளிலே தெலுங்குதான் வடமொழியொடு மிகவும் கலந்து விசேடமான திருத்தப்பா டடைந்தது; தனாது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக்கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக்கொண்டது. தெலுங் கிலக்கண மெல்லாம் தமிழ்ப்போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதைவிடுத்து வட மொழிப் போக்கை யனுசரிக்கப் புகுத்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக்கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயபட்ட ராதிய பிராமண வையாகரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரண மாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி என்றென்பது அசங்கதமாம்.

இவ்வாறே கன்னடமுந் தெலுங்கையொட்டிப் பெரிதும் இயங்கினமை யான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டது. இதனா லன்றோ ‘பழங்கன்னடம்’ என்றும் ‘புதுக்கன்னடம்’ என்றும் அஃது இரு வேறு பிரிவினதாகி யியங்குகின்றது. பழங்கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப்புலவர் பலர் இன்றுமுளர்.

இனி மலையாளமோ வெகுநாள்காறுந் திருந்தாதிருந்தது. இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர் ‘எழுத்தச்சன்’ என்பானொரு வனால் மிக்கத் திருத்தப்பாடு அடைத்தது; உடனே வடமொழிச் சொற்களையுஞ் சொற்றொடர்களையும் சந்திகளையும் முடிபுகளையும், மலையாளம் மேற் கொண்டது.

மேற்கூறிய தெலுங்கு கன்னடம் மலையாள மென்னும் மூன்று வழிமொழிகளும் வடநூல் யாப்பையும் அணியையு முடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன.

இனித் தமிழ்மொழியும் வடமொழியுங் கலத்தியங்கு மாற்றைப் பற்றிச் சிறிது விரித்துரைப்பாம்.

ஆதிவரலாறு முற்றிற்று.
 

 
II. வடமொழிக் கலப்பு.
 

 

வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று, வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்க ளெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்த