பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

209

என்ற சூத்திரத்தாற் செந்தமிழ் நாடு இன்னதென்பது அறிக. செந்தமிழ் நிலத்தைச்சேர்ந்த பன்னிரண்டு குறுநிலங்களும் கொடுந்தமிழ் நாட்டின்பாற்பட்டன.

“தென்பாண்டி குட்டங் குடக்கற்கா வேண்பூழி
பன்றி யருவா வதன்வடக்கு-நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்”

என்ற பழைய வெண்பாவினாற் கொடுந்தமிழ்நாடு இன்னதென்பது அறிக: இனிச் செந்தமிழ் நாட்டைச் சோணாட்டின்கண் வைத்துச் சூத்திரஞ் செய் தாருமுளர்.

“செந்தமிழ் நாடே,
மன்ற வாணன் மலர்திரு வருளால்
தென்றமிழ் மகிமை சிவணிய செய்த
அடியவர் கூட்டமு மாதிச் சங்கமும்
படியின்மாப் பெருமை பரவுறு சோழனும்
சைவமா தவருந் தழைத்தினி திருக்கும்
மைபறு சோழ வளநா டென்ப”

என்பதுங் காண்க. இது தமிழர் கண்மீது சைனர்க்குண்டாகிய பொறாமை காரணமாக வெழுந்ததேயாம்.

முற்காலத்துச் சங்கச் செய்யுட்களும் அவற்றினுரைகளும், இடைக் காலத்துக் ‘கம்பராமாயண’ மாதிய நூல்களும் அவற்றி னுரைகளும், இக் காலத்து வெளிப்படுஞ் செய்யுணூல்களுமாகிய யாவையும் இயற்றமிழாம். இவ்வியற்றமிழ் இசைத் தமிழ்க்கும் நாடகத் தமிழ்க்கும் முன்னர்த் தோன்றினமைபற்றி அஃது இவ்விரண்டற்கும் முன்வைக்கப் படுவதாயிற்று. அன்றியும் இயற்றமிழே இவ்விரண்டற்கும் உயிரென விளங்குவது. இயற்றமிழின்றி இவ்விரண்டும் தனித்தியங்குவனவல்ல.

இசைத் தமிழென்பது, பண்ணொடு கலந்துந் தாளத்தொடு கூடியுமியங்குஞ் செந்தமிழ்ப் பாட்டுக்களானுங் கொடுந்தமிழ்ப் பாட்டுக்களானு மியன்ற இலக்கியங்களும் அவற்றினிலக்கணங்களுமாகும் நூல்களின் தொகுதியாம். இதன்கண், கீர்த்தனங்களும், வரிப்பாட்டுக்களும், சிந்து ஆனந்தக்களிப்பு கும்மி தெம்பாங்கு முதலியனவும் அடங்குமென்க. இயற்றமிழின் கண் வழங்குஞ் சொற்களுஞ் சொற்றொடர்களுமின்றி இசைத் தமிழெங்ஙனம் இயங்க முடியுமோ? அன்றியும் இயற்றமிழ்ச் செய்யுட்கள் இசையெடுத்துத் தாளமறுத்துப் பாடப்படின், அவை இசைத்தமிழின் பாற்படும். இராகத்தொடுமட்டில் இயைத்துப் பாடப்படும் பாடல்கள் இயற்றமிழின்பாற் பட்டனவாக மதிக்கப் படுமேயன்றிப் பிறிதில்லை. தாளமும் உடன் கூடிய வழியே அதை இசைத் தமிழின்பாற் படுமென்க. முற்காலத்து வழங்கிய ‘பெருநாரை’, ‘பெருங்குருகு’. ‘இசை நுணுக்கம்’, ‘தாளவகையோத்து’, முதலியனவும், இடைக்காலத்துத்