பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி யாரியற்றிய

[முதற்

தோன்றிய ‘தேவாரம்’ முதலியனவும், இக்காலத்து வெளிப்பட்டுலவுகின்ற ‘கந்த புராண கீர்த்தனை’, ‘பெரியபுராண கீர்த்தனை’, ‘சங்கீத சந்திரிகை’ முதலியனவு மாகிய யாவையும் இசைத் தமிழாம். இவ்விசைத்தமிழ், நாடகத் தமிழ்க்கு முன்னர்த் தோன்றினமைபற்றி முன் வைக்கப்படுவதாயிற்று. அன்றியும் இவ்விசைத் தமிழே நாடகத்தமிழிற்குச் சிறப்பும் விளக்கமும் தந்து நிற்பதாம் இசைத்சமி ழில்வழி நாடகத் தமிழிற்கு இயக்கமில்லை; ஆடையற்ற நங்கை வெளிப்படாதவாறுபோல, இசையற்ற நாடகத்தமிழும் வெளிப்படுதலின்றி உள்ளடங்கியே யிருத்தல் வேண்டும். எனவே நாடகத் தமிழிற்கு இயற்றமிழும் இசைத் தமிழும் இன்றியமையாச் சிறப்பினவாம். ஏன்? இயற்றமிழும் இசைத் தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறக்குமென்று கூறுதலே அமைவுடைத்தாம்.

“அன்றியும் நாமுணர்ந்த பிறபாஷைச் சரித்திரங்களிலும் உற்றுநோக்குழி, இயற்றொடர் நிலைச் செய்யுட்களும் இசைத்தொடர் நிலைச்செய்யுட்களுமாகிய பாமுறைகளின் தொடக்கங்கள் ஒருங்கேனும் தனித்தேனும் நாடகக் கலையின் தொடக்கங்களுக்கு முன்னரே யிருந்துளவென்பது மலையிலக்கே. இவ்விரண்டுஞ் சேர்ந்துழியே நாடகமானது நாகரிகமுள்ள நாடுகளனைத்திலுங் கலைகளுளொன் றெனக் கருதத்தக்கவாறு தோன்றி வளர்கின்றது. இம்முறைக் கிணங்கியே நந்தம் தமிழ்மொழியின் கண்ணும் இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழிற்கு முற்படுவன வாயின. அன்றியும் மேற் கூறியவாற்றான் இயற்தமிழும் இசைத்தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறந்ததென்பதும் பெற்றாம். இதுபற்றியன்றே தமிழ்மொழியை இயலிசை நாடகமென முப் பகுதியாக்கி முறைப்படுத் தோதியதுமென்க” என்ற நாடக வியலுடையார் கூற்றையும் உற்று நோக்குக.

இனி இடைக்காலத் தொடக்கத்தில் தோன்றிய, இசைத் தமிழிலக்கிய நூலாகிய மூவர் ‘தேவார’ங்களும் தமிழிற்கேயுரிய பண்ணுந்திறமும் பயின்றனவாகி யொளிர்கின்றன. அத்தேவாரங்களுக்குப் பின்னரேற்பட்ட இசைத் தமிழிலக்கிய நூல்களில் வடமொழிபிராகவமைப்புந் தாளவமைப்புங் காணப் படுகின்றன. அதன்மேல் இற்றை நாள்களிலுலவுறும் இலக்கியமும், இலக்கணமுமாகிய இசைத்தமிழ் நூல்களெல்லாம் ‘மேளகர்த்தா’ என்னும் வட நூலைத் தழுவியே அமைக்கப்பட்டிருக்கின்றன. சிற்சில நூல்கள் நாட்டியத் திற்குரிய வடமொழிப் பரததாளங்களினும் ஏற்பட்டிருக்கின்றன. இசைத் தமிழின்கண் ஏற்பட்ட வடமொழிக் கலப்பு இவ்வளவுதான்.

பழைய இசைத்தமிழ் நூல்களும் பெரும்பாலன இறந்துவிட்டன. இரண்டொன்று மட்டில் ஆங்காங்கு காணப்படுகின்றன, அவைதாமுஞ் சின்னாட்களில் வெளியிடப் படாவிடின் அழிந்துபடினும் படும். இவ்வாறு இசைத்தமிழ் நூல்கட்குக் குறைவு நேரக் காரணம் யாது? இடைக் காலத்திலிருந்த மக்களுக்குள் ஒழுக்கச் சீர்திருத்தஞ் செய்யப், புகுந்த போலியாரியர்