பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

வி. கோ, சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்


வல்லாள னொருவன் எளியவனுக்கு உதவி செய்யப்புகுந்து சின்னாள் அவனைப் பாதுகாத்துப் பின்னர் அவன் மேற்கொண்ட தொழிலை நன்றாக நடத்தாமை கண்டு அவனைத் தள்ளிவிட்டுத் தான் அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தாற்போல, நாவின் சைகையும் கைச் சைகையி னுதவிக்காக வந்து அதனைச் சின்னாள் பாதுகாத்துப் பார்த்தும் அதுகருத்து வெளியீட்டுத் தொழிலை நன்கு நடத்தாமையால் அதனைத் தள்ளிவிட்டுத் தானே அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தது. புகுந்து தான் நடாத்தினதிற் சொற்கள் பலவுண்டாயின.

சில தன்மை, முன்னிலைப் பகுதிகள் அறிகுறிவகையா லெழுந்திருக்கலா மென்றெண்ணுதற் கிடனுண்டு. அதுதானும் உச்சரிக்கச் சுலபமாகவும் எழுத்துக்களிற் பிரதானமாகவுமுள்ள ‘ம’, ‘ப’ என்ற எழுத்துக்களின் சம்பந்தமுடையதாம். இவ்விரண்டெழுத்துக்களும் குழந்தைகளான் முதன்முதல் உச்சரிக்கப் படுவனவாம். இவ்விரண்டும் குழந்தைகட்கு அருகிருந்து உதவி செய்யுந் தாய் தந்தையரைக் குறிப்பிக்குஞ்சொற்களாகிய ‘அம்மா’ ‘அப்பா’ என்றன பிறப்பதற்கு முதற் கருவியாய் நிற்பன. மேலும் மகாரம் பல பாஷைகளிலுந் தன்மைச் சொற்களை ஒருமையிற் குறித்தற்க ணுபகாரப்படா நிற்ப, தமிழ்மொழியின் கண்ணே அவற்றைப் பன்மையிற் குறித்தற்க ணுபகாரப்படா நின்றது. ‘மாம்’ (என்னை) என்பது வடமொழித் தன்மை யொருமை. ‘யாம்’ ‘எம்மை’ யென்பன தமிழ்மொழித் தன்மைப் பன்மை. எவ்வாறாயினும் மகாரந் தன்மைக்கண் உபகாரப் படுகின்றதென்பது மலையிலக்கே. இனி இதனொடு தாயைக் குறிக்கும் ‘அம்மா’ என்ற சொல்லின் கண்ணும் மகாரம் உபகாரப்படுதலை உற்று நோக்கின் தாய் குழந்தைக்குத் தன்னவளாயினள். இதைக் கவனிக்குமிடத்துத் தந்தை சிறிது தன்னினின்றும் விலகினவனாக மதிக்கப்படுவதற்கு அறிகுறியாகக் பகார சப்தத்தினால் ‘அப்பா’ என்றழைக்கப் படுகின்றனன்.

தமிழப் பாஷையின்தோற்ற விஷயமாக, யாம் மேற்கூறிய போந்தன வனைத்தும் எவ்வாறு கருதப்படினும் படுக. கருத்துக்கள் தன் முயற்சி யானெழும் ஒலிகளின் சம்பந்தமாகவே வெளிப்படுகின்ற இயல்பினின்றுமே பாஷைகள் உண்டாத லியலுமென்பது யாவரும் மறுக்க முடியாத்தோர் பாஷை நூலுண்மை. இவ்வுண்மையை யொட்டியே தமிழ்ப் பாஷையின் தோற்றமும் ஏற்பட்டிருத்தல் மிகவும் கவனிக்கற்பாலதே. ஈதிவ்வாறக, தமிழ் நூலாசிரியர் பலரும், இக்காலத்தினும் ஆங்கிலநூற் பயிற்சியில்லாத நண்பருட் சிலரும் தமிழ்மொழியும் வடமொழியுந் தேவபாஷைகளென்றும், இவ்விரண்டும் முறையே அகத்தியனார்க்கும் பாணிநியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டனவென்றுங் கூறாநிற்பர். “ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய, மாதொருபாகனை வழுத்துதும்” எனவும், “தழற்புரை நிழற்கடவு டந்தமிழ்” எனவும், “வடமொழியைப் பாணிநிக்கு வகுத்தருளி