பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

221

யதற்கிணையாத், தொடர்புடைய தென்மொழியைத் தொகுகடல் சூழ்வரைப்பதனிற், குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்” எனவும், “இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்” எனவும் முந்தையோர் கூறியிருத்தலையுங் காண்க.

யாம் மேற்கூறிப் போந்தவாறு மக்களாக்கப் பொருளாய்விளைந்த தமிழ்ப் பாஷையானது தமிழ்மக்கள் யாவருக்கும் ஒருங்கே விளங்குவதாயிற்று, என்றதோர் ஆசங்கை இடையிலெழுதல் இயல்பே. இது வெகுசுலபமாக விடுக்கப்படும். யாவருக்கும் விளங்கத்தக்க சைகைகள் இடைநின்று சொற்களை ஐயமுண்டான காலங்களில் விளக்கினமையின் தமிழ்ப்பாஷையின் சொற்பொரு ளுணர்ச்சி தமிழ்மக்கள் யாவருக்கும் உண்டாகித் தமக்குள்ளே யறிந்து கொண்டனர்.

இதுகாறும் தமிழ்மொழியின் தோற்றத்தைப்பற்றிப் பேசினோம். இனித் தமிழ்மொழியின் தொன்மையைப் பற்றிக் கூறப்புகுவாம்.

இவ்வுலகத்தின் கண்ணே பேசப்படுவன ஏறக்குறைய தொள்ளாயிரம் மொழிகளாம். அவற்றுள்ளே நாலைந்துபாஷைகள் தாம் ‘தொன்மொழிகள்’ என்னும் பெயர்க்குரியனவாய்க் கருதப்படுகின்றன. அந்நாலைந்தனுள்ளும், தமிழ் மொழியும் ஒன்றுகொல்? இதுவே யாம் இப்பொழுது ஆராய வேண்டுவது.

பரவை வழக்கற்று ஏட்டுவழக்காய்மட்டில் நிற்பனவே தொன்மொழிகள்; மற்று இக்காலத்திற் பரவை வழக்காய் விளங்குவன வெல்லாந் தொன் மொழிக ளாகாவென்பது சிலர் துணிபு. இகத்துணிபு தருக்கநூற் குற்றமே. பாஷைகள் பரவை வழக்கற்றுப் போதற்குக் காரணம் இலிபிக ளேற்படாமையும், பாஷை பேசுவோர் பல்வேறிடங்கட்குப் பிரிந்து செல்லலும், இடங்கட்குத் தக்கபடி புது இலிபிகள் வகுத்துக்கோடலும் பிறவுமாம். ஏட்டு வழக்குப் பாஷைப் பேச்சு வழக்குப் பாஷைக்கிணங்கி வாராவிடின் முன்னது பரவை வழக்கற்றுத் தன்னிலை வேறுபடாது ஒரு நிலைப்பாடடைந்து நிற்கும். பின்னது விரிந்து கொண்டேபோய் முன்னதினின்று மிகவும் வேறுபட்டு அதன் வழிமொழியெனக் கருதப்படும். ஆகவேபேச்சு வழக்கோ டிணங்கி வராதன வெல்லாந் தொன் மொழிகளோ? அல்ல.

தமிழ் மொழியில், ‘ட், ண், ர், ல், ள், ழ், ற், ன்,’ என்ற எட்டு மெய்யெழுத்துக்களையுங் கொண்டு சொற்கள் தொடங்குகின்றில: அஃதாவது, இவ்வெட்டும் மொழிக்கு முதலில் வாராத எழுத்துக்களாம். இவைகளேன் மொழிக்கு முதலில் வரவில்லை? இவ்வெட்டும் நா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நாவெழுத்துக்களாம். அங்ஙனம் மேலண்ணந் தொட்டு உச்சரித்தற் பொருட்டு வேண்டப்படு முயற்சி மிகுதியா யிருத்தலின் அவ்வெட்டு மெய்களும் மொழிக்கு முதலில் வாராவாயின. இவ்வுண்மை கொண்டு, பண்டைக்காலத்தே, வழங்கிய மக்களுக்கு உறுப்புக்கள் உரமேறி அரிது முயற்சி செல்லாத இளம்பருவத்தே முற்பட்டுத் தோற்ற முற்றெழுந்த