பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்


நிகண்டு வகுத்த புலவர்களிற் சிலர் சொற்பொருளாராய்ச்சிக் குறைவாற் பிழைபோன விடங்களுமுண்டு. உதாரணமாகச் ‘சூடாமணிநிகண்டு’ என்ற நூலிற் காணப்படும் பலபிழைகளுள் ஒன்று காட்டுவோம். ‘சரகம்’ என்ற சொல்லுக்குத் ‘தேனீ’ என்ற பொரு ளில்லையாகவும், இந்நாலின்கட்

“சரகஞ்சா கினிவெள்ளாடு தேக்கெனுந் தருவு தேனீ”

என்று கூறப்பட்டுள்ளது. இதற்குற்ற காரணமென்னை? ‘சரகம்’ என்ற சொல்லுக்கே அப்பொருளுண்டு; ஆகவே ‘சரகம்’ என்றதிலுள்ள ரகாரத்தைச் சகர ஆகாரத்தின் அறிகுறியாகிய காலென வரிவடிவிற்கண்டு மருண்ட மருட்சியே அப்பிழைக்குற்ற காரணமாமாறு தேற்றம்.

இவ்வாறு ஆராய்ச்சிக் குறைவால் நிகழ்ந்த மேற்கூறிய வழு பிற்றைநாளிலக்கியங்களிலும் இடம்பெற்று விட்டது. இலக்கண விலக்கியத் தெழுவரம்பிசைத்த சிவஞான முனிவரது மாணாக்கருட் சிறந்தவரும், ‘தணிகைப்புராணம்’ முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியருமாகிய கச்சியப்ப முனிவர் தமது ‘வண்டுவிடுதூது’ என்ற நூலின்கண் “ஏக்குலங்க, டாங்கியுகையாத சரகமே” என்று வண்டை விளிக்கின்றனர்.

ஆகவே நிகண்டேறி இலக்கியங்களிலும் பயின்று வருஞ் சொற்கள் தவறுடையனவென்பது, பின்னர் நிகழும் ஆராய்ச்சிகளிற் புலப்பட்டாலும் அவற்றைத் திருத்தப்புகுதல் ஒருநாளும் ஓராற்றனுஞ் சாலாது. பிழை பிழையாகவேதான் இருத்தல் வேண்டும். மாற்றுதல் பாஷையின் வரலாற்றிற்குத் தீங்கு பயக்கும். இப்படிப் பிழைபோன விடயங்கள் ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளில் எத்துணையோ உள.

இலக்கியமும் இலக்கணமும் ஒன்றனை ஒன்றுவிடாமற் பற்றி நிற்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கும் இவை தம்முள்ளே காரணங்களாகின்றன. ஆதிகாலத்திலேயே இவ்வருமைசான்ற உண்மையை நன்குணர்ந்த ஆசிரியர் அகத்தியனார்,

“இலக்கிய மின்றி யிலக்கண மின்றே
யிலக்கண மின்றி யிலக்கியமின்றே;
எள்ளினின் றெண்ணை யெடுப்பது போல
விலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம்”

என்று சூத்திரஞ் செய்ததனை அறிவுடையோர் உய்த்து நோக்குக.

பாஷை வேறுபடுமாறு முற்றிற்று.
 

 
VIII. நூற்பரப்பு
 

 

ரு பாஷையின் நூற்பரப்பு அதன் முதிர்ச்சிக்கும் அதனைப் பயில்வாரது நாகரிக விருத்திக்குத் தக்கபடி வேறுபடுமென்பது யாவரு முணர்ந்த விஷயம். நூற்செல்வமுடைய பாஷைகளுக்குள்ள கெளரவமுஞ் சிறப்பும் அளவிட்