பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதிதாசன் 19 தமிழெனில் உயிரே யென்பான் தரிக்குமென் மூச்சே யென்பான் அமிழ்தெனு முணவே யென்பான் அகத்தெழு முணர்ச்சி யென்பான் கமழ்ந்திடு மணமே யென்பான் - கவிதையின் சுவையே யென்பான் தமிழ்க்கவி பார திக்குத் தாசனும் நானே யென்பான் ! இலக்கண இலக்கி யத்தில் எதுவுமே தெரியா ராகிக் கலைக்களம் வளர்ப்போ ரென்றும் கவிஞர்கள் யாமே யென்றும் தலைக்கணம் கொண்டு நாட்டில் தருக்கிடுங் கூட்டங் தன்னைத் தொலைக்கவே பிறந்த தோன்றல் பாரதி தாச னன்ருே ? காதலின் தூய்மை காட்டிக் கவிதையின் சுவையைக் கூட்டி மாதரின் இன்பங் தன்னை மறுத்திடும் கூட்ட மோட்டிச் சாதியு மதமு மன்பைத் தடுத்திடும் சதியைப் போக்கிப் பாதகம் வீழச் செய்தோன் பாரதி தாச னன்ருே ?