பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 தமிழ் முழக்கம் செய்வீர்! பிழையின்றிப் படித்தற்கும் எழுது தற்கும் பெரும்பாலார் முயல்வதில்லை. இலக்க ணத்தை நுழைப்பதற்கு மூளையிலே இடமு மில்லை நொண்டியென வாசகத்தை எழுது கின்ருர். அழைத்துவந்து தமிழறிவைப் புகுத்த வேண்டும் அழகுதமிழ் கடைசிறக்க உழைத்தல் வேண்டும் பிழையில்லாச் செந்தமிழைப் பெருக்க வேண்டும் பேருலகில் தமிழ்முழக்கம் எழுப்ப வேண்டும் ! நமையெல்லாம் மகிழ்ச்சியிலே ஆழ்த்து கின்ற நல்லதொரு செய்தியுண்டு கூறு கின்றேன். தமிழ்நாட்டில் ஆட்சிமொழி தமிழே யென்று தக்கதொரு சட்டத்தை ஆக்கி விட்டார். இமைப்போதும் தாழ்க்காதீர் தொண்டு செய்வீர் ! எத்திசையும் உலகரங்கில் முதலி டத்தை கமைப்பெற்ற தமிழ்த்தாய்க்கே நல்கும் வண்ணம் நாட்டிடுமோர் உணர்ச்சியுடன் உழைக்க வாரீர்!