பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

107

மன்னர், சுருதி மன்னர் என்னும் முப்பிரிவினை யுடையாராய் வாழ்ந்துவந்த தெய்வீக மன்னர் வமிசத்தைச் சேர்ந்தவருள் நத்த மன்னர் என்னும் பிரிவைச் சேர்ந்தவர் அவர் முப்பிரிவினரும் உடையார் என்ற பட்டப் பெயருடன் பற்பல இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். யாவர்க்கும் பொதுவாக அமையும் வகையில் பார்க்கவ குல சங்கம் என்ற பெயருடன் ஒர் சங்கத்தை 06-08-1911ல் தொடங்கினார். சுவாமிகள் தம் திருக்கடைக்கண்ணோக்கால் அவர்கள் தொடங்கி வைப்பதால் அச் சங்கம் தம் சிறுவர்க்குக் கல்வியறிவை வளர்க்கவும் நல்லொழுக்கமும் கொண்டு யாவரும் வாழ வழி காட்டவும் துணைபுரிய வேண்டுமென்றெண்ணி சுவாமிகளை மணம்பூண்டிக்கு அழைத்துச் சென்றார். ஆங்கு பற்பல வெளியிடங்களிலிமிருந்து வந்திருந்தோர்க் கெல்லாம் தக்க வசதிகள் செய்து கொடுத்திருந்ததோடன்றிப் பெரிய பந்தர் ஒன்றையும் அமைத்திருந்தார்கள், அப் பந்தலில் விழாத் தொடங்கிற்று. திருக்கோவலூர்ப் புராணத்தில் அவர்களுடைய வரலாறு கூறப்பட்டிருக்கிறது. மலைய மன்னன், ஒளவையார், கபிலர் முதலாம் சங்ககாலச் சார்புடைய ஆன்றோர் வழித் தோன்றல்களாம் அப் பார்க்கவ குல சங்கத்தினர்க்கு ஆசி பல கூறியும் பழைமை போற்றிச் சமய வளர்ப்பு முதலாயவைகளில் நாட்டம் கொண்டு சமூக சேவை புரிந்து சமுதாயத்தை மேம்படுத்த இச்சங்கம் துணைபுரிக’ என்ற பொருள் பொதிந்த நல்லுரையுடன் தொடங்கி வைத்தார்கள். -

பின்னர், அச்சங்க ஆண்டு விழாக்களுக்கு நம் சுவாமிகளையே அவர்கள் விரும்பியழைப்பாராயினர். பல பல வெளியூர்களில் நடந்த அச்சங்க ஆண்டு விழாக்களில் சுவாமிகள் தலைமை தாங்கி, அம் மரபினரே யன்றி ஆங்காங்குக் குழுமிய மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். முடியனூர் ராவ் சாகேப் குழந்தைவேல் உடையார் கும்பகோணம் வக்கீல் – சிவஞான உடையார் முதலாயவர் சுவாமிகளை ஆங்காங்கு அழைத்துச்சென்று சிறப்பித்த பார்க்கவ குல சங்கச் செல்வராவர்.

பார்க்கவ குல சங்கத்தின் பத்தாம் ஆண்டுவிழா, கொங்கு நாட்டுச் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. 1925-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த அவ்வாண்டு விழா மிக்க சிறப்புப் பெற்ற விழாவாகும். தனித்ததோர் பெரிய பந்தரில்