157
வல்லிக்கண்ணன்
பாடுவர் 'என்றே நான் ஈடேறுவேன்' - என்னும் வினா, என்னை ஈடேறவைக்குங்காலம் எது? என வினாவியதாகப் பிரித்துக் காட்டுவர். பின்னும் ஒருமுறை அதனைப் பாடி 'உயர்ந்த திருப் போரூரா என்றே நான் கூறியே ஈடேறுவேன் என்ற பொருளில் கூறுவார்கள்.
‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'
என்பது, அருணகிரிநாதர் கந்தரனுபூபதியின் இறுதியான 51ஆம் பாடல், முதல் முறையாக, இங்ஙனமே பாடுவார்கள். அடுத்து, உருவாய் - அருவாய்; உளதாய் - இலதாய்; மருவாய் மலராய்; மணியாய் - ஒளியாய்; கருவாய் - உயிராய்; கதியாய் - விதியாய் - என்றிவ்வாறு எதிர்மறைத் தொடர்களையும், இணைந்த தொடர்களையும் கூட்டிப் பொருளுணரும் வகையிற் பாடுவார்கள்.
இறுதியில், உருவாய் - அருவாய் - வருவாய். உளதாய் - இலதாய் வருவாய், மருவாய் - மலராய் வருவாய், மணியாய் - ஒளியாய் வருவாய், கருவாய் உயிராய் வருவாய், கதியாய் - விதியாய் வருவாய் என்றின்ன இரட்டைத் தொடர்களைக் கூறிச் சிறப்பாக, இறுதியில் குருவாய் வருவாய்! என முடிக்குங்கால் அன்பர்களின் கண்களில் நீர் பெருகுவதைக் காணக்கூடும். குருவோடிணைத்துக் கூற எப்பொருளும் இல்லையன்றோ?
‘ஏழைக் கிரங்குதெய்வம் என்றுன்பால் வந்தடைந்தேன், ஏழைக் கிரங்க இது தருணம் ஊழைவென்ற
சீலமுனி வோர்போற்றும் தென்பழநி வெற்பில்உறை
நீல மயில்முருகா நீ.'
என்ற பாடலைக் கூறுவார்கள். பின்னும் ஒருமுறை, நீல மயில் முருகா! நீ ஏழைக் கிரங்கு தெய்வம் எனத் தொடங்கிப்பாடி விற்பூட்டுப் பொருள் கோளாவதனை நன்கு தெளியப் பாடி அன்பரிடையே பழநியாண்டவனின் எளிவரும் கருணைத் திறத்தைச் சுட்டாமற் சுட்டிப் பாடிக் கண்ணீர்வாரத் தொழுது முடிப்பார்கள்.
ஏதேனும் ஓர் இலக்கியத்தைப் பாடம் நடத்துங்கால், ஒரு பாடலை முதன்முறை படிப்பார்கள். பின் பதம் பிரித்துப்